இல்லத்தரசிகளுக்கு இன்ப அதிர்ச்சி!! சமையல் எண்ணெய் மேலும் விலை குறைய வாய்ப்பு!!

 
சமையல் எண்ணெய்

சமையல் எண்ணெய் இறக்குமதி மீதான சுங்க வரிச் சலுகை மேலும் நீட்டிப்பு- மத்திய அரசு தகவல் சர்வதேச சந்தையில் சமையல் எண்ணெயின் விலை இறங்கு முகமாக இருந்து வருகிறது. இதனால் இந்தியாவிலும் சமையல் எண்ணெயின் சில்லறை  விற்பனை விலை சரிய வாய்ப்புக்கள் இருப்பதாக மத்திய நேர்முக வரிகள் மற்றும் சுங்க வாரியம் தெரிவித்துள்ளது. இது குறித்த செய்திக்குறிப்பு ஒன்றை சுங்க வாரியம் வெளியிட்டுள்ளது.

பாமாயில் எண்ணெய்

அதில் குறிப்பிட்ட சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி சுங்க வரியில் தற்போதுள்ள சலுகை 2023 மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் நிலவி வரும்  விலை வீழ்ச்சியால் சமையல் எண்ணெயின் விலை இறங்கு முகத்தில் உள்ளது. விலையின் வீழ்ச்சி மற்றும் இறக்குமதி தீர்வை குறைப்பு இவைகளால் இந்தியாவில் சமையல் எண்ணெயின் சில்லறை விற்பனை விலை கணிசமாக குறையலாம். இதன் மூலம் சுத்திகரிக்கப்படாத பாமாயில், ஆர்பிடி பாமாலின், ஆர்பிடி பாமாயில், சுத்திகரிக்கப்படாத சோயா பீன் எண்ணெய், சுத்திகரிக்கப்பட்ட சோயாபீன் எண்ணெய், சுத்திகரிக்கப்படாத சூரியகாந்தி எண்ணெய், சுத்திகரிக்கப்பட்ட சூரியகாந்தி எண்ணெய் இவைகளின் மீது வரி விதிக்கப்பட்டிருப்பதால் இந்த வகை எண்ணெய்கள் விலை குறைய வாய்ப்புக்கள் இல்லை.

சமையல் எண்ணெய்

அதே நேரத்தில் சுத்திகரிக்கப்படாத பாமாயில் வகைகள்,  சோயா பீன் எண்ணெய்,  சூரியகாந்தி எண்ணெய் இவைகளின் மீதான இறக்குமதி தீர்வை தற்போது வரை பூஜ்யமாக இருந்து வருகிறது. இதனால் இந்த வகை எண்ணெய்கள் மேலும் விலைக் குறைய வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன. இந்தியாவை பொறுத்தவரை செப்டம்பா் 1ம் தேதி நிலவரப்படி உள்ளூர் சந்தையில் கடலை எண்ணெயின் சராசரி சில்லறை விற்பனை விலை ஒரு கிலோ ரூ.188.04 , நல்லெண்ணெய் ஒரு கிலோ ரூ.172.66, வனஸ்பதி ஒரு கிலோ ரூ.152.52, சோயாபீன் எண்ணெய் ஒரு கிலோ ரூ.156, சூரியகாந்தி எண்ணெய் ஒரு கிலோ ரூ.176.45, பாமாயில் ஒரு கிலோ ரூ.132.94 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web