அசத்தல்!! ரயில் பயண வரலாற்றில் முதன் முறையாக இலவச ஸ்மார்ட் இதழ்!!

 
யுவர் ப்ளாட்பார்ம்

இந்தியாவில் தொலை தூர பயணங்களுக்கு பெரும்பாலும் நடுத்தர மக்களின் ஒரே சாய்ஸாக இருப்பது ரயில்கள் தான். ரயில் பயணங்களை சுகமாக்கவும், பயணிகளின் வசதிகளை மேம்படுத்தவும் இந்தியன் ரயில்வே அவ்வப்போது புதுப்புது அப்டேட்களை  செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது ரயில் பயணிகளுக்கு செய்தித்தாள் வழங்க புதிய திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி  யுவர் பிளாட்ஃபார்ம் என்ற பெயரில் இந்திய இரயில்வே பற்றிய விரிவான கதைகள் மற்றும் தகவல்களையும், வாழ்க்கையின் பல்வேறு நிலைகளில் உள்ள சுவாரஸ்யமான மற்றும் பொருத்தமான கட்டுரைகளையும் கொண்ட பத்திரிகையை இலவசமாக வழங்க உள்ளது.

யுவர் ப்ளாட்பார்ம்
இந்தியாவின் அனைத்து பிரீமியம் ரயில்களிலும் பயணிகளுக்கு இந்தப் பத்திரிகை இலவசமாக விநியோகிக்கப்பட உள்ளது. இந்த பத்திரிகை ரயிலின் உள்ளே மட்டுமே கிடைக்க உள்ள பிரத்யேக பத்திரிகை. இதனை தென்னக ரயில்வே செப்டம்பர் 30ம் தேதி அறிமுகப்படுத்தியுள்ளது. சென்னையில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இதன் நகல்களை வெளியிட்டார். சென்னையில் இந்த இதழ் சென்னை  கோட்ட ரயில்வே மேலாளர் சிந்தனையில் உருவாகியுள்ளது. ரயில் பயணத்தின் போது அவர்களுக்கு துணையாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

யுவர் ப்ளாட்பார்ம்
மொத்தம் 32 பக்கம் உள்ள இந்த ரயில்வே இதழ் உலகம் மற்றும்  கண்கவர் அம்சங்களைப் பற்றிய சுவாரஸ்யமான நுண்ணறிவை வழங்கும்" என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் "இந்திய இரயில்வேயைப் பற்றிய விரிவான கதைகளும், தகவல்களும் கூட இடம் பெற்றிருக்கும். வாழ்க்கையின் பல்வேறு துறைகளில் உள்ள சுவாரஸ்யமான மற்றும் பொருத்தமான கட்டுரைகளைக் கொண்டு வருவதன் மூலம் இந்த இதழ் பயணிகளுக்கும் ரயில்வேக்கும் இடையே ஒரு அற்புதமான பாலமாக செயல்படும் என தெரிவித்துள்ளது. ரயில்வே அதிகாரிகள் ஆலோசனையின் பேரில் தற்போது இந்த இதழ் நடத்தப்பட்டு வந்தாலும் இதில் கிடைக்கும் விளம்பரங்களின் வருவாய் மூலம் ஒவ்வொரு முறையும் புதுப்பிக்கப்பட்டு வழங்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web