அதிரடி!! சரவெடி!! தமிழகத்திலேயே முதன்முறையாக அரசுக் கல்லூரிகளில் ..!!

 
டிரைவிங் லைசென்ஸ்

தனியார் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இணையான கல்வித்தரத்தை அரசு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அளித்திட தமிழக அரசு பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக பல்வேறு திட்டங்களையும் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. கடலூர் மாவட்டத்தில்  பின்தங்கிய, விவசாய கூலித் தொழிலாளர்கள் அதிகம் வசித்து வருகின்றனர்.

டிரைவிங் லைசென்ஸ்

இவர்களில் பெரும்பாலானோர்  காட்டுமன்னார் கோவிலில் அமைந்துள்ள அரசு கலைக் கல்லூரியில் ஆயிரத்திற்கும் அதிகமான மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர். இவர்களுக்கு  டிரைவிங்  லைசென்ஸ் வழங்கப்படும் என சிதம்பரம் மோட்டார் வாகன ஆய்வாளர் வாக்குறுதி அளித்திருந்தார். இதன் அடிப்படையில்  கல்லூரி முதல்வர், உடற்கல்வித்துறை இயக்குநர் இருவரும் மாணவர்களை தேவையான ஆவணங்களோடு தனி அரசு பேருந்து முலம் சிதம்பரம் ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர். அதனை தொடர்ந்து, முதல் கட்டமாக மாணவர்களுக்கு பழகுனர் உரிமம் வழங்கப்பட்டது.

கடலூர்

பிறகு கல்லுாரிக்கே நேரடியாகச் சென்று, மாணவர்களை வாகனம் ஓட்டச் சொல்லி ஆய்வு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து, சிதம்பரம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு நேற்று லைசன்ஸ் வழங்கப்பட்டது. தமிழகத்திலேயே, அரசு கல்லூரி மாணவர்களுக்கு நேரடியாக டிரைவிங் லைசன்ஸ் முதல் முறையாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த வாரத்தில் கல்லூரியில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில், பழகுநர் உரிமம் வைத்திருந்த மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கி, அவர்களுக்கு ரூ17000 மாதச்சம்பளத்தில் தனியார் நிதி நிறுவனம் வேலை வாய்ப்பை வழங்கியது. இந்நிலையில், தற்போது மாணவர்களுக்கு லைசென்சும் வழங்கப்பட்டிருப்பது பெற்றோர்கள், மாணவர்கள்  மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web