அரசு ஊழியர்கள் செல்போன் பயன்படுத்த தடை! வெளியானது உத்தரவு!

 
மொபைல்

கொரோனாவிற்கு அடுத்த காலகட்டத்தில் சின்னஞ்சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரின் வாழ்க்கை முறையும் முற்றிலும் மாறிவிட்டது. யாரும் அருகில் இருப்பவர்களை கண்டு கொள்வதில்லை. தொலைதூரத்தில் உள்ள நண்பர்களிடம் மொபைல் மூலம் பேசி வருவதையே வாழ்க்கையாக கொண்டுள்ளனர். ஒரு வேளை சாப்பாடு இல்லாமல் கூட இருந்துவிடுவர்.

மின்சாரம்

அலைபேசி இல்லாமல் அவர்களுக்கு அணுவும் அசைவதில்லை. பல நேரங்களில் அனைவரின் வாழ்விலும் பெரும் தொல்லையாகவே இருந்து வருகிறது. அலுவலகங்களில் இன்னும் மோசம். வேலை நேரத்தில் கூட சமூக வலைதளங்களிலேயே பிசியாக உள்ளனர். அரசு அலுவலகங்கள் கேட்கவே தேவையில்லை. . காலையில் தூங்கி முழிப்பதும் செல்போன் தான். இரவு உறங்கும் முன் கடைசியாக பார்ப்பதும் செல்போன் தான் என்று சொல்லும் அளவுக்கு அனைவரது வாழ்க்கையிலும் செல்போன் முக்கிய பங்கு வகிக்கத் தொடங்கி விட்டது.

இந்நிலையில் ஆந்திரா அரசு நிறுவனமான மத்திய மின் விநியோக கார்ப்பரேஷன் லிமிடெட் (CPDCL) நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் பணி நேரத்தில் செல்போன் எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அரசு நிறுவனத்தில் இதுபோன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. 

இது தொடர்பாக சிபிடிசிஎல் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஜே.பத்மா ரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், பணி நேரத்தில் செல்போன்களை பயன்படுத்தி வேலை நேரத்தை வீணடிப்பதாகவும், இதனால் அன்றாட வேலை நேரத்தின் போது செல்போன் பயன்படுத்த தடை விதித்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தடை

இந்த புதிய விதி வருகிற 1-ம் தேதி அமலுக்கு வரும் என்றும், சிபிடிசிஎல் ஊழியர்கள் அனைவரும் பணிக்கு வரும் போதே தங்கள் செல்போனை ஒப்படைத்து விட்டு செல்ல வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. பணி நேரத்தில் போன் பேச அனுமதி கிடையாது என்றும், உணவு இடைவேளை மற்றும் தேநீர் இடைவேளையின் போது செல்போனை பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் அதிகாரிகளுக்கு இந்த விதியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எந்த ஊழியராவது இந்த விதிகளை பின்பற்ற தவறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web