நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கு திருமணம்?! வைரலாகும் மணப்பெண் புகைப்படம்!!

 
ஹரிஷ் கல்யாண்

நடிகர் ஹரிஷ் கல்யாண் சினிமா துறையில் கால் பதித்து பல்வேறு படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். அதைத்தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதைத்தொடர்ந்து பிக்பாஸ் பிரபலமான நடிகை ரைசாவுடன் இணைந்து நடித்த ‘பியார் பிரேமா காதல்’ திரைப்படத்தின் மூலம் பெரிய வரவேற்பை பெற்றார்.


இந்நிலையில் நடிகர் ஹரிஷ் கல்யாண் தனது ட்விட்டர் பக்கத்தில் தசரா பண்டிகைக்கான வாழ்த்துக்களை தனது ரசிகர்களுக்கு கூறியுள்ளார். அதில் ஒரு பெண்ணின் கையைக் கோர்த்தபடி ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ‘மங்களகரமான தொடக்கங்களை நோக்கி’ என்று பதிவு செய்துள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் நடிகர் ஹரிஷ் கல்யாண் விரைவில் திருமணம் செய்த கொள்ள  இருக்கிறார் என்று பேசி வருகின்றனர். ஆனால் யார் அந்த பெண் என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது. சிலர் நடிகை பிரியா பவானியாக இருக்குமோ என்ற சந்தேகத்தையும் எழுப்பி வருகின்றனர்.

இவரும் பிரியா பவானி சங்கரும் காதலில் உள்ளதாக ஏற்கெனவே சினிமா வட்டாரங்களில் கிசுகிசு கிளம்பிய நிலையில் நடிகையோ தான் ஏற்கனவே ஒருவரை காதலித்து வருவதாக கூறி கிசுகிசுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web