நடிகர் சூர்யா குடும்பத்துடன் டெல்லி பயணம்!! பரபரக்கும் திரையுலகம்!!

 
நடிகர் சூர்யா குடும்பம்

தமிழ் திரையுலகில் முண்ணனி கதாநாயகன்களில் ஒருவர் நடிகர் சூர்யா. இவரின் 2டி புரொடக்‌ஷன் மூலம் சமீபத்தில் வெளியான ஜெய்பீம் திரைப்படம் இந்தியா முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது. இவருடைய நடிப்பில் 2020ல் வெளியான சூரரை போற்று திரைப்படத்திற்காக இவருக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை பெற நடிகர் சூர்யா  குடும்பத்துடன் தலைநகர் டெல்லி செல்கிறார்.  இன்று சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி புறப்பட்டு செல்லும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 சூர்யா

‘சூரரைப்போற்று’ படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை இன்று மாலை அவர் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் இருந்து பெறுகிறார்.கடந்த 2020ம் ஆண்டு வெளியான ‘சூரரைப்போற்று’ திரைப்படத்திற்கு மொத்தம் 5 தேசிய விருதுகள் கிடைத்துள்ளன. அதில் நடித்த சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்துள்ளது. 

அதன்படி இன்று மாலை டெல்லியில் 68-து தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது. அதில் நடிகர் சூர்யா தேசிய விருதை பெற உள்ளார். இது அவருக்கான முதல் தேசிய விருது என்பதால் தனது குடும்பத்தினரும் உடன் இருக்க விரும்பியதால் டெல்லிக்கு சென்றுள்ளனர்.

நடிகர் சூர்யா

நடிகர் சூர்யா, மனைவி ஜோதிகா, மகன் தேவ், மகள் தியா ஆகியோர் சென்னை விமான நிலையத்திற்கு டெல்லி புறப்பட செல்ல வந்த போது எடுத்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.மேலும் ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தில் நடித்த நடிகை அபர்ணா சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெறுகிறார். மேலும் சிறந்த பின்னணி இசைக்காக ஜிவி பிரகாஷ், சிறந்த திரைக்கதைக்காக இயக்குனர் சுதா கொங்கரா ஆகியோரும் இன்று மாலை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு கரங்களால் தேசிய விருதை பெற உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web