நல்லகண்ணு மருத்துவமனையில் அனுமதி!! தொண்டர்கள் அதிர்ச்சி!!

 
நல்லகண்ணு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு.இவருக்கு வயது  97. இவருக்கு வயது மூப்பு மற்றும் காய்ச்சல் காரணமாக நேற்று மாலை 6:15 மணிக்கு  சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். அவர் காய்ச்சல் மற்றும் சிறுநீரக தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

நல்லகண்ணு
அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு  தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்  கம்யூனிஸ்ட் தலைவர்  நல்லக்கண்ணுவின் உடல்நிலை சீராக உள்ளது.

நல்லகண்ணு

பொதுப்பிரிவு மருத்துவர்கள் சிறுநீரகவியல் துறை மருத்துவர்கள்  அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் கொரோனா, டெங்கு பன்றிக்காய்ச்சல் பரிசோதனைகளும் செய்யப்பட்டுள்ளன. மருத்துவ வல்லுனர்கள் குழு தொடர்ந்து  அவரது உடல்நிலையை கண்காணித்து வருகிறது எனத் தெரிவித்துள்ளார். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web