க்ளாசில் க்ளாஸாக அஜித் ஓவியம்! அசத்தும் இளைஞர்!

 
செல்வம்

பிளாஸ்டிக் டம்ளரில் அசத்தலாக நடிகர் அஜித் ஓவியத்தை வரைந்து தள்ளுகிறார் ஓவியர் செல்வம். இந்த புகைப்படங்களை ரசிகர்கள் அதிகளவில் ஷேர் செய்து கொண்டாடி வருகின்றனர்.

'வலிமை' படத்தைத் தொடர்ந்து, மீண்டும் எச்.வினோத்துடன்  நடிகர் அஜித்குமார் இணைந்து நடித்து வருகிறார். 'ஏகே61' என அழைக்கப்படுகிற இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை மஞ்சு வாரியர் நடித்து வருகிறார். 

செல்வம்

ஷூட்டிங் இடைவெளிகளில் இவர்கள் இருவரும் இமயமலை போன்ற பகுதிகளுக்கு மோட்டார் சைக்கிளில் ஜாலி ட்ரிப் போய் வருகின்றனர். அஜித்துடன் இந்தப் படத்தில் ஜான் கொக்கென், வீரா, யோகிபாபு, மகாநதி சங்கர் போன்ற பலரும் நடிக்கின்றனர். 

படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த 21ம் தேதி வெளியான நிலையில், படத்திற்கு 'துணிவு' என்று பெயரிடப்பட்டுள்ளது. ‘துணிவு’ என்கிற வார்த்தையை வைத்து அஜித் ரசிகர்கள் ட்ரெண்டாக்கி கொண்டாடி வருகின்றனர். வங்கி கொள்ளையை மையமாக வைத்து இந்த படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. 

செல்வம்

இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த மணலூர்பேட்டை சேர்ந்த ஓவியர் செல்வம், நடிகர் அஜித்குமார் நடித்து வெளிவரும் 'துணிவு' படம் வெற்றி பெற வேண்டி இரண்டு யூஸ் அண்ட் த்ரோ கிளாசில், ஒரு கிளாஸில் அஜித் படம் வரைந்தும், மற்றொரு கிளாசில் ரெட், வலிமை, துணிவு திரைப்படத்தில் வரும் அஜித்தின் மூன்று  கதாபாத்திரங்களின் ஓவியங்களையும் வரைந்து அசத்தியுள்ளார். இந்த ஓவியத்தை பார்த்து அஜித் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் ஓவியர் செல்வம் அவர்களுக்கு பாராட்டுக்கள் தெரிவித்து, இணையதளத்தில் பகிர்ந்து வருகின்றனர். 

முன்னதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்வர் கலைஞர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோரின் ஓவியங்களை ஒரே நேரத்தில் வரைந்து, பாராட்டுக்களைப் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

From around the web