அன்பில் மகேஷுக்கு பன்றிக் காய்ச்சல்!! அமைச்சர் எச்சரிக்கை!!

 
அன்பில் மகேஷ் , மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தமிழக அரசு தீவிரமாக அமல்படுத்தியுள்ளது. இருந்த போதிலும் குழந்தைகள், அரசியல்வாதிகள், பிரபலங்கள், மருத்துவர்கள், சாமானியர்கள் என பாரபட்சமின்றி காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தமிழக பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் உடல் நலக்குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அன்பில் மகேஷ் மா..சுப்பிரமணியன்

இவரது உடல் நிலை குறித்து மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழிக்கு தற்போது பன்றிக்காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  நேற்று முன்தினம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அமைச்சரவை கூட்டத்திற்கு பின்னர் உடல்நிலை சரியில்லாமல் போனது.அதைத்தொடர்ந்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

பன்றிக் காய்ச்சல்

அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது. அதைத்தொடர்ந்து தற்போது நடத்தப்பட்ட பரிசோதனையில் அமைச்சர் அன்பில் மகேசுக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் அவர் இன்னும் 2 நாட்களில் வீடு திரும்புவார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது அவரின் உடல்நிலை சீராகவே உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் அமைச்சர் அன்பில் மகேஷ் மருத்துவர்களின் கண்காணிப்பிலேயே இருந்து வருகிறார். இது குறித்த தகவலை மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் தெரிவித்தார்.இதைத்தொடர்ந்து பொது மக்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web