திருப்பதி போறீங்களா? இந்த மாசத்துல ஒரு நாள் தரிசனம் ரத்து! ஏன் தெரியுமா?

 
திருப்பதி திருமலை பெருமாள்

திருப்பதி, திருமலையில் இந்த மாதம் 25ம் தேதி சூரிய கிரகணத்தை முன்னிட்டு, காலை  முதல் மாலை வரை வெங்கடாஜலபதியை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதியில்லை. அன்று மாலை வரை கோவில் நடை சாத்தப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

உலகப் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வருடம் முழுவதும் லட்சக் கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக குவிந்து கொண்டே இருக்கிறார்கள். வருடத்தின் 365 நாட்களிலும் திருவிழா நடைப்பெறுகிற ஆலயமாக திருமலைத் தேவஸ்தானம் விளங்குகிறது.  தற்போது கொரோனா பரவல் குறையத் தொடங்கியதை அடுத்தும், புரட்டாசி மாதம் என்பதாலும், பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. 

சூரிய கிரகணம்

இந்நிலையில், அக்டோபர் 25 ம் தேதி மாலை 5.11 மணி முதல் மாலை 6.27 மணி வரை சூரிய கிரகணம் நிகழ இருக்கிறது. இதன் அடிப்படையில் அன்றைய தினம் காலை 8.11 மணி முதலே திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை சாத்தப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அன்றைய தினம் இரவு 7.30 மணிக்கு தான் கோவில் கதவுகள் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

திருப்பதி தேவஸ்தானம் இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அக்டோபர் 25 ம் தேதி சூரிய கிரகணத்தை முன்னிட்டு  பிரேக் தரிசனம், ஸ்ரீவாணி, ரூ.300 தரிசனம், முதியோர், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகளுடன் வரும் பெற்றோருக்கான தரிசனம், பாதுகாப்புப் பணியாளர்களுக்கான தரிசனம், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான தரிசனம், கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை என அனைத்து சேவைகளும் ரத்து செய்யப்பட உள்ளன. அன்றைய தினம் முழுவதுமே இலவச தரிசனத்திற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட உள்ளது.

முன்பதிவு செய்த டிக்கெட்டுகளை என்ன செய்வது? திருப்பதி தேவஸ்தானம் பதில்..!!

இந்த நேர அடிப்படையில் பக்தர்கள் திருப்பதி தேவஸ்தானத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்த சூரிய கிரகணம் ஐரோப்பா, தெற்கு/மேற்கு ஆசியா, வடக்கு/கிழக்கு ஆப்பிரிக்கா, அட்லாண்டிக் பகுதிகளில் கண் கூடாக பார்க்கலாம்.  இந்த கிரகணம் சூரியனின் 65 சதவிகித பகுதியை நிலவு மறைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web