மாணவர்களே தயாரா?! அக்டோபர் 11 முதல் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்களுக்கான மருத்துவ கலந்தாய்வு!!

 
கலந்தாய்வு

இந்தியாவில் எம்பிபிஎஸ் படிப்புக்களுக்கு நீட் தேர்வு எழுத வேண்டியது அவசியமாகிறது. இந்தியா முழுவதும் கலந்தாய்வு நடத்தப்பட்டு மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டில் எம்பிபிஎஸ்,  பிடிஎஸ் படிப்புகளுக்கான அகில இந்திய மருத்துவ ஒதுக்கீட்டு இடங்களுக்கான மருத்துவ கலந்தாய்வு அக்டோபர்  11ம் தேதி தொடங்க இருப்பதாக மருத்துவ கலந்தாய்வு குழு அறிவித்துள்ளது.

கலந்தாய்வு

அதன்படி அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் எய்ம்ஸ்,  ஜிம்பர்  மருத்துவ கல்லூரிகளில் அக்டோபர் 11ம் தேதி  முதல் 20ம் தேதி வரை முதல் கட்ட மருத்துவ கலந்தாய்வு நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அக்டோபர் 17ம் தேதி முதல் 28ம் தேதிக்குள் இந்திய மாநிலங்களில் முதல் கட்ட மருத்துவ கலந்தாய்வை நடத்திக் கொள்ளலாம் என இந்திய  மருத்துவ கலந்தாய்வு குழு அறிவித்துள்ளது.

கலந்தாய்வு

மேலும் இதன் மூலம் கல்லூரிகளை தேர்வு செய்பவர்கள் அக்டோபர் 28ம் தேதிக்குள் கல்லூரிகளில் சேர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.  2ம் கட்ட மருத்துவ கலந்தாய்வு நவம்பர்  2ம் தேதி முதல் நவம்பர் 10ம் தேதி வரை நடைபெறும்.நவம்பர் 7ம் தேதி முதல் நவம்பர் 18ம் தேதி வரை 2ம் கட்ட மருத்துவ கலந்தாய்வு நடைபெறும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது. கல்லூரிகளை தேர்வு செய்த மாணவர்கள் நவம்பர் 18ம் தேதிக்குள் கல்லூரிகளில் சேர வேண்டும் என தெரிவித்துள்ளது.  மாநிலங்களுக்கான கலந்தாய்வில் கலந்து கொள்பவர்கள் நவம்பர் 21ம் தேதிக்குள் கல்லூரியில் சேர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!