கெத்து காட்டும் டிடிஎப்!! யூடியூபர் வாசன் கைது செய்து உடனடி விடுதலை!!

 
டிடிஎப் வாசன்

கோயம்புத்தூர் மேட்டுப்பாளையத்தில் வசித்து வருபவர் டிடிஎப் வாசன். இவர் Twin throttlers என்ற யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். இவர் அடிக்கடி பைக்குகளில் சாகசங்கள் நிகழ்த்தி அதனை  வீடியோவாக சமூக வலைதளங்களில் பதிவிடுவதும் தொடர்ந்து செய்து வந்தார். வாசன், ஹெல்மெட்டில் கேமராவைப் பொருத்தி பைக்கின் வேகத்தை வீடியோவாக பதிவு  செய்து யூட்யூபில் பதிவிட்டு லைக்குகளை அள்ளி வந்தார். இதே போல் செப்டம்பர்  14ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த டிக் டாக் பிரபலம் ஜி.பி.முத்துவை  தனது பைக்கின் பின் சீட்டில் அமர வைத்து அதிவேகத்தில் பைக்கை இயக்கி இதனை வீடியோவாக எடுத்து பதிவிட்டார். 

டிடிஎப் வாசன்
அந்த வீடியோ வைரலான நிலையில் அதிவேகமாக பைக் ஓட்டுதல், பில்லியன் ரைடர் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுதல்  ஆகிய பிரிவுகளில் வழக்குபதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். இந்த வழக்கிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்ள மதுக்கரை உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில்  சரணடைந்து அன்றைய தினமே  ஜாமீன் பெற்றார். அத்துடன் ஊடகங்கள் அவதூறு பரப்பி தமக்கு மிரட்டல் விடுப்பதாகவும் வாசன் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். 

போலீஸ்
இந்த வீடியோ குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்ட நேரத்தில்  டிடிஎப் வாசன்  பெங்களூருக்கு தப்பிச் செல்ல முயன்றார். அவரை மடக்கி பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர் . இது குறித்து வாசன் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் ஊடகங்கள் தன்னை பற்றி தொடர்ந்து தவறான செய்திகளை பரப்பி வருவதாகவும், வீடியோவில் பேசியது அதன் வெளிப்பாடுதான் எனவும் தெரிவித்துள்ளார். புறவழிச் சாலையில் விதிகளை மீறி அதிவேகமாக பைக் ஓட்டியது தவறு தான் . ஆனால் தற்போது தவறை உணர்ந்து படிப்படியாக வேகத்தை குறைத்துக் கொள்ள போவதாகவும் வாசன் தெரிவித்துள்ளார். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web