ஆயுத பூஜை சிறப்புக்கள், வழிபாடு , பலன்கள்!!

 
ஆயுத பூஜை


புரட்டாசி அமாவாசை தொடங்கி தசமி முடிய 10 நாட்கள் தசரா. இந்த நாட்களில் அம்பிகையை கொலுவாக வீடுகளில் வீற்றிருக்கிறாள். 10 வது நாள் மகிஷாசுரமர்த்தினியாகி நம் வாழ்வின் இன்னல்கள், இடர்ப்பாடுகள், துன்பங்களை போக்கி இன்பம் சேர்க்கிறாள். இதில் இன்று நவமி திதியில்  ஆயுத பூஜையும், நாளை தசமி திதி அன்று விஜயதசமியும் இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

ஆயுத பூஜை
குறிப்பாக தென் மாவட்டங்களில் இந்த பண்டிகை மிகச் சிறப்பாக  கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின் ஒன்பதாம் நாளான நவமியில் தான் அம்பிகை  மகிஷாசுரனை வதம் செய்வதாக ஐதீகம். இந்த  வெற்றியை  போற்றும் வகையில் நாளை  விஜய தசமி கொண்டாடப்படுவதாக புராணங்கள் கூறுகின்றன. இந்த போரில் வெற்றி பெற  துர்க்கை அம்மன் ஆயுதங்களுக்கு பூஜை செய்கிறாள் இந்த தினமே  ஆயுத பூஜையாக  கொண்டாடப்படுகிறது. ஆயுத பூஜை தினத்தில் மக்கள் அவர்களின் தொழிலுக்கு பயன்படுத்தும் உபகரணங்கள், அத்தியாவசியமான பொருட்களை வைத்து வணங்குவது வழக்கமாக இருந்து வருகிறது. 

ஆயுத பூஜை

இன்றைய தினத்தில் நம் தொழிலுக்கு தேவையான உபகரணங்கள், வீட்டில் உள்ள அத்தியாவசிய உபகரணங்கள், வீடு மற்றும் அலுவலகத்தில் உள்ள வாகனங்களை கழுவி, குங்குமம் சந்தனம் வைத்து, மாலை சூட்டவேண்டும். மாணவர்களை பொறுத்தவரை  புத்தகங்களில் படிப்பு சம்பந்தப்பட்ட உபகரணங்களில் சந்தனம் குங்குமம் வைப்பது சிறப்பு. துர்க்கை முன் அனைத்தையும் சமர்ப்பித்து துதிகள், பாடல்கள் பாடி பூஜையை நிறைவு செய்ய வேண்டும். சிலர் திருஷ்டி கழிக்க வெள்ளைப் பூசணிக்காய்  உடைப்பதும் வழக்கமாக இருந்து வருகிறது. இதனால் அனைத்து விதமான தோஷங்களும் நீங்குவதாக ஐதிகம்.  சிறிய ஊசி முதல் கத்தி, அரிவாள், சமையல் கருவிகள், கத்தரிக்கோல், ஸ்பேனர்கள், கணினி, வேறு இயந்திரங்கள், புத்தகங்கள் என அனைத்து வகையான கருவிகளையும் வைத்து வழிபாடு செய்கின்றனர். ஆயுத பூஜையில் துர்க்கையை வழிபடுவோம். அவள் தாள் பணிந்து இன்பமான வாழ்க்கையை வரமாக பெறுவோம். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web