பகீர்!! காரக்குழம்பில் காது குடையும் பட்ஸ்!! சாப்பாட்டு பிரியர்களே உஷார்!!

 
கீதா கபே

இன்றைய வாழ்க்கை முறையில் இளைய தலைமுறையினர் பலரும் வீடுகளில் சமைப்பதே இல்லை. எந்நேரமும் உணவகங்கள், சாலையோர நடைபாதை கடைகள் உட்பட சின்ன சின்ன கடைகள் தொடங்கி பெரும் நட்சத்திர ஹோட்டல் வரை அனைத்து உணவகங்களும் நிரம்பி வழிகின்றன. அதே நேரத்தில் அங்கே தயாராகும் உணவுகளும் பல நேரங்களில் விஷமாகி பெரும் சோகத்தையும் அபாயத்தையும் ஏற்படுத்தி விடுகின்றன. அந்த வகையில் சென்னையில் பகீர் அதிர்ச்சி தரும் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. சென்னை பல்லாவரத்தில் கீதா கபே என்ற தனியார் உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

கீதா கபே

இங்கு வழக்கமாக வந்து சாப்பிட்டு செல்லும் வாடிக்கையாளருக்கு பரிமாறப்பட்ட காரக்குழம்பில், காது குடையும் பட்ஸ் கிடந்ததால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது இதன் உரிமையாளர் மணிகண்டன். மிகவும் பரபரப்பான இந்த இந்த உணவகத்தில் 6 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் கீதா கபேயில் மதிய உணவு சாப்பிடச் சென்றார். முதலில் சாம்பார் ஊற்றி சாப்பிட்ட முருகன், அதன் பின்னர் காரக்குழம்பு கேட்டுள்ளார். அப்போது பரிமாறப்பட்ட காரக்குழம்பு சாப்பாட்டு மீது ஊற்றும் போது அதில், காது குடைய பயன்படுத்தும் பட்ஸ் கிடந்துள்ளது. இதை பார்த்த அதிர்ச்சியடைந்த முருகன் இது குறித்து உரிமையாளரிடம் கேட்டார். 

உணவு பாதுகாப்பு

அதற்கு உரிமையாளர் மணிகண்டன், முருகனிடம் அதை எடுத்துப் போட்டுவிட்டு சாப்பிடுங்கள் என்று மிகவும் கூலாக பதில் சொல்லி இருக்கிறார். இதை கேட்டு முருகன் அதிர்ச்சியடைந்துள்ளார். இதுபோன்ற சுகாதாரமற்று செயல்படும் பல்வேறு உணவகங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.நாளுக்கு நாள் கெட்டுப் போன மாமிச உணவுகள், உணவில் வண்டு, ஈ உட்பட  வயிற்று கேடு விளைவிக்கும் பொருட்கள்  இருப்பதால் மக்கள் உடல் நலம் வெகுவாக பாதிக்கப்படுகிறது. உணவு தயாரிக்கும் உணவகங்கள் சக மனிதனின்  உடல் நலம் ஆரோக்கியத்தின் மேல் சிறிதளவாவது அக்கறை கொண்டு செயல்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web