உணவக சோதனைகளில் வீடியோ எடுக்கத் தடை!! நீதிமன்றம் அதிரடி!!

 
உணவு தடை

சமீபகாலமாக உணவகங்களில் விற்பனை செய்யப்படும் உணவுகள் விஷமாகி வருவது தொடர்கதையாகி வருகிறது. இது குறித்து ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ்குமார், உணவகங்களில் ஆய்வுக்கு செல்லும்போது விதிகளை பின்பற்றாமல் ஊடகங்களை அழைத்துச் சென்று வீடியோ எடுத்து வெளியிட்டு விடுகிறார்.

கெட்டுப் போன உணவு

இதனால் தங்கள் உணவகங்களின் பெயர் கெடுகிறது. வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறையும் அபாயம் நிலவி வருகிறது. எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழலை உருவாக்குகிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணையில் கெட்டுப் போன உணவு என்பதை ஆய்வகத்தில் உறுதி செய்த பிறகு தான் நடவடிக்கை எடுக்க உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு அதிகாரம் உள்ளது. அதனை மீறி ஆய்வுக்கு செல்லும் போதே ஊடகங்களை அழைத்துச் சென்று வீடியோ எடுத்து வெளியிடுவது தவறு எனவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இனி இதே தவறுகள் நடக்கக் கூடாது.

உயர்நீதிமன்றம்

அதாவது சோதனைக்கு செல்லும் போது ஊடகங்களை அழைத்துச் செல்லக்கூடாது, மாறாக துறை ரீதியான புகைப்பட கலைஞர்களையோ, வீடியோ பதிவாளரையோ அழைத்துச் செல்லலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் உணவகங்களில் நடத்தப்படும் திடீர் சோதனைகளை வீடியோ எடுத்து வெளியிட தமிழக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு இடைக்காலத்தடையும் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான பதில் மனுவை இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரியும், தமிழக அரசும் அக்டோபர் 17ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web