உஷார்!! ரயில்களில் எடுத்துச் செல்ல தடை!! மீறுபவர்களுக்கு சிறை தண்டனை!!

 
ரயில் பட்டாசு

இந்தியா முழுவதும் இன்னும் சில வாரங்களில் தீபாவளி கொண்டாடப்பட உள்ளது. துணிமணிகள், பட்டாசுகள் , இனிப்புக்கள் என இப்போதே ஆயத்தமாக தொடங்கி விட்டனர்.சாதாரணமாகவே ரயில்களில் பட்டாசுகள், டீசல், பெட்ரோல் போன்ற எளிதில் தீப்பற்றும் பொருட்கள் எடுத்துச் செல்ல தடை அமலில் உள்ளது. இருப்பினும், தீபாவளி சமயத்தில் வியாபாரிகள் மற்றும் பயணிகள், அபாயத்தை உணராமல் பட்டாசுகளை சாதாரணமாக எடுத்துச் செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.

ரயில் முன்பதிவு

இதனை கட்டுப்படுத்தி முற்றிலும் தடுக்கும் வகையில் இந்தியா முழுவதும்  ரயில் நிலையங்களில் பண்டிகை காலங்களில் கூடுதல் கண்காணிப்பு பணிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நடப்பாண்டிலும் இந்த  கண்காணிப்பு பணிகள் தொடரும் என்ற போதிலும் இதுகுறித்து ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரி செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் "பட்டாசு உட்பட வெடி மருந்து, எரிபொருட்கள் எடுத்துச் செல்ல தடை உள்ளது. எனவே விதியை மீறி பட்டாசு எடுத்துச் சென்றால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். முதன்முறையாக பிடிப்பட்டால், 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

பட்டாசு

அல்லது 6 மாதங்கள் சிறைத் தண்டனை வழங்கப்படும் தொடர்ந்து, இதுபோன்ற விதி மீறல்களில் ஈடுபட்டால், 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது ரூ5000 வரை அபராதம் விதிக்கப்படும். தீபாவளி இன்னும் சில வாரங்களில் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் ரயில்களில்  பட்டாசு எடுத்து செல்வதை தடுக்கும் வகையில், 'மெட்டல் டிடெக்டர்' பரிசோதனை நடத்தப்படும்.  பயணியரின் உடமைகள் அனைத்தும் தீவிர பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படும். அடுத்த வாரம் ரயில்களில் பாதுகாப்பான பயணம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும்  நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web