78 நாள் ஊதியத்திற்கு சமமான போனஸ்! மத்திய அரசு அறிவிப்பு!

 
பணம்

சூப்பரான அறிவிப்பு.. மத்திய அரசு ஊழியர்களான ரயில்வே ஊழியர்களுக்கு இந்த தீபாவளி செம கொண்டாட்டம் தான். 2021-22 நிதியாண்டில் தகுதியுள்ள ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியத்திற்கு சமமான உற்பத்தித்திறன் இணைக்கப்பட்ட போனஸ்க்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு லட்சக்கணக்கான குடும்பங்களுக்குப் புன்னகையை அளிக்கும் வகையில்,  இந்த போனஸ் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சனிக்கிழமை வெளியானது. தசரா பூஜை விடுமுறைக்கு முன்னதாக இந்த போனஸ் செலுத்தப்படும் என்றும்,  மேலும் இந்த முடிவானது சுமார் 11.27 லட்சம் அரசிதழ் அல்லாத ரயில்வே ஊழியர்கள் பயனடைவார்கள் என தெரிகின்றது.

இதற்கான முக்கிய அறிவிப்பை ரயில்வே அமைச்சகம் ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. அந்த ட்வீட்டில், "ரயில்வேயின் உற்பத்தி மற்றும் செயல்திறனை அதிகரிக்க ஊக்கத்தொகை வழங்கப்படும். இதன் மூலம் 11.27 லட்சம் தகுதியுள்ள ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியத்திற்கு இணையான உற்பத்தித்திறன் இணைக்கப்பட்ட போனஸுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதல் அளித்துள்ளார். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இந்நிலையில்  RPF, RPSF பணியாளர்களைத் தவிர்த்து அரசிதழில் உள்ள ரயில்வே ஊழியர்கள் ஊதியம் மாதம் 7000 க்கு மேல் இருந்தால், அவர்களுக்கு இணைக்கப்பட்ட போனஸ் ‘ஊதியம்’ 7000 என கணக்கிடப்பட்டுள்ளது. இதனால் மகிழ்ச்சியில் உல ரயில்வே ஊழியர்கள் மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web