கொண்டாட்டம்!! அக்டோபர் 10 வரை உலக விண்வெளி வார விழா !!

 
விண்வெளி வார விழா

பூமியில் மனிதனின் வாழ்க்கையில் எத்தனை எத்தனையோ இடர்ப்பாடுகள், வாழ்வதில் சவால்கள் சிக்கல்கள் தொடர்ந்தாலும் விண்வெளியிலும் ஆராய்ச்சிகள் தொடர்ந்து வருகின்றன. விண்வெளியில் மனிதன் வாழ்வதற்கான சாத்திய கூறுகள் தொடங்கி பல்வேறு விதமான தொடர் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் விண்வெளி வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது.

விண்வெளி வார விழா

அந்த வகையில் நடப்பாண்டுக்கான உலக விண்வெளி வாரம் அக்டோபர் 4ம் தேதி நேற்று தொடங்கி அக்டோபர்  10ம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது.  அதன்படி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்துள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இந்த விழாவை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்துள்ளார். 

விண்வெளி வார விழா

ஒவ்வொரு ஆண்ப்டும் அக்டோபர் 4-ம்தேதி முதல் 10ம் தேதி வரை உலக விண்வெளி வாரம் விண்வெளி தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது குறித்து சர்வதேச சமூகத்திற்கு கல்வி கற்பிக்கும் விதமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த விழாவை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்த போது உடன் சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் இயக்குநர் ராஜராஜன் மற்றும் இஸ்ரோ மூத்த விஞ்ஞானிகள் ஆகியோர் கலந்து கொண்டார்கள். அதைத்தொடர்ந்து விண்வெளித்துறையில் இந்தியாவின் பங்கு மற்றும் முன்னேற்றங்களை குறிக்கும் வகையில் அறிவியல் கண்காட்சியும் நடைபெற்றது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web