அக்டோபர் 7ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!! வெளில போனா குடை எடுத்திட்டு போங்க!!

 
மழை

 தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழைபெய்து வருகிறது.இந்த மழை மேலும் 5 நாட்களுக்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு  மையம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் மத்திய வங்கக் கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மேலும் மழை நீடிக்கும்.

 கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்றும், நாளையும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும் என்றும்,  நாளை முதல் அக்டோபர் 7 ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

கன மழை

சென்னையை பொறுத்தவரை அடுத்த 2 நாட்களுக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

 

தென் தமிழக கடலோரப்பகுதிகளில்  சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web