இரங்கல்!! முதல் பெண் தபால்காரர் ஆனந்தவல்லி மரணம்!!

 
ஆனந்தவல்லி

சிறிது காலத்திற்கு முன்பு வரை தகவல் பரிமாற்றத்திற்கு தபால்களே பெரும்பாலும் பயன்பட்டன. அவரவர் சொந்த கையெழுத்தில் விரும்புபவர்கள் முகவரி தேடி தபால்காரர்கள் மூலம் பயணித்து வரும் கடிதங்களை பெற காத்து கிடந்த காலங்கள் உண்டு. மொபைலின் ஆதிக்கம் அதிகரித்த பிறகு தபால்காரர்கள் நினைவுகளே இந்த கால குழந்தைகளுக்கு இல்லை எனலாம். 

தபால்

கேரள மாநிலத்தில் முதல் பெண் தபால்காரராக கே.ஆர்.ஆனந்தவல்லி (90) என்பவர் நியமிக்கப்பட்டார். இவரது கணவர் ராஜன். இந்த தம்பதிக்கு தனராஜ் என்ற மகன் உண்டு. ராஜன் ஓய்வு பெற்ற ஆசிரியர்.இந்நிலையில் பட்டதாரியான கே.ஆர்.ஆனந்தவல்லி ஆலப்புழா மாவட்டத்தில் அமைத்துள்ள தத்தபள்ளி தபால் நிலையத்தில் பெண் தபால்காரராக பணியில் சேர்ந்தார். இதன் மூலம் கேரள மாநிலத்தின் முதல் பெண் பெண் தபால்காரர் என்ற பெருமையை பெற்றார். அங்கிருந்து ஆனந்தவல்லி  ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள பல்வேறு தபால் நிலையங்களில் தபால்காரராக பணியாற்றினார். அதுமட்டுமல்லாமல், அஞ்சலக அலுவலர் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டார்.

rip

அதைத்தொடர்ந்து கே.ஆர்.ஆனந்தவல்லி கடந்த 1991-ம் ஆண்டு பணியில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் ஆலப்புழாவில் குடும்பத்துடன் வசித்து வந்தார். வயது மூப்பு காரணமாகவும் உடல்நிலை பாதிப்பு காரணமாகவும் கே.ஆர்.ஆனந்தவல்லி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் கே.ஆர்.ஆனந்தவல்லி நேற்று உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த கே.ஆர்.ஆனந்தவல்லி தனது வீட்டில் காலமானார். இதைத்தொடர்ந்து கே.ஆர்.ஆனந்தவல்லியின் உடலுக்கு கிராமத்து மக்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web