அசத்தல்! ‘மிஸ் தமிழ்நாடு’ பட்டம் வென்ற கூலி தொழிலாளியின் மகள்! குவியும் வாழ்த்துகள்!

 
மிஸ் தமிழ்நாடு ரக்சயா

மிஸ் தமிழ்நாடு அழகு போட்டியில், வெற்றி பெற்று சாதித்துள்ளார் ஏழை கூலி தொழிலாளியின்  மகள் ரக்சயா. மிஸ் இந்தியா அழகி போட்டியில், நாட்டின் பல மாநிலங்களில் இருந்தும் அழகிகள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த இரு பெண்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் மிஸ் தமிழ்நாடு பட்டத்தைப் பெற்றிருக்கிறார் ஏழை கூலி தொழிலாளியின் மகளான ரக்சயா. இதில் கலந்து கொள்வதற்கான மாநில அளவிலான அழகி போட்டி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் நடந்தது. இந்த போட்டியில் இந்தியா முழுவதும் இருந்து 750 இளம்பெண்கள் கலந்து கொண்டனர். தமிழகத்தில் இருந்தும் ஏராளமான மாணவிகள் பங்கேற்றனர்.
அழகி போட்டி

இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 2 இளம் பெண்கள் வின்னர், ரன்னர் என்ற அடிப்படையில் மிஸ் தமிழ்நாடு பட்டத்தை வென்றனர். ரன்னர் பிரிவில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் - தளவாய்புரத்தைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவி நிஷோஜா தேர்வு செய்யப்பட்டார். வின்னர் பிரிவில் செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் பகுதியை சேர்ந்த ரக்சயா(20) என்பவர் மிஸ் தமிழ்நாடு பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.

அழகி போட்டி

அதே போல் அனைத்து மாநிலங்களிலும் வின்னர், ரன்னர் என சுமார் 750 பேர் இறுதிப் போட்டிக்கு தேர்வாகியுள்ளனர். மேலும் வருகிற டிசம்பர் மிஸ் இந்தியா அழகி போட்டியில் இந்தியா முழுவதும் தேர்வாகிய வின்னர், ரன்னர் என அனைவரும் ஸ்டேஜ் ஷோ செய்ய உள்ளனர். இதில் தேர்வாகும் நபர் மிஸ் இந்தியா பட்டத்தை வெல்ல உள்ளனர். 

நிச்சயம் மிஸ் இந்தியா பட்டத்தை தட்டிச் செல்வேன் என்று நம்பிக்கையோடு சொல்கிறார் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம்பெண் ரக்சயா. இவருக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிந்த வண்ணம் உள்ளன.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

From around the web