967 கிராமங்களில் குடிநீர் விநியோகம் ரத்து?! கடும் அவதியில் பொதுமக்கள்!!

 
குடிநீர் குழாய் உடைப்பு


 தென்மேற்கு பருவமழை காரணமாக இந்தியாவின் பல மாநிலங்களில் கனமழை கொட்டி வருகிறது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏரி, குளங்கள் நிரம்பி வழிகின்றன.இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தின் அண்டை மாநிலமான கர்நாடகாவில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக கனமழை கொட்டி வருவதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு காவிரியில் ஏற்பட்ட வெள்ளம் கொள்ளிடம் ஆற்றில்  திருப்பி விடப்பட்டுள்ளது. 

குடிநீர் குழாய் உடைப்பு

இதன் காரணமாக கடந்த 2 மாதங்களாக கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. இதன் காரணமாக கடந்த 19ம் தேதி கொள்ளிடம் ஆற்றின் பல இடங்களில் மண் அரிப்பு ஏற்பட்டு குடிநீர் குழாய் செல்லும் பாலம் இடிந்து விழுந்துவிட்டது. இது குறித்து பொது மக்கள் குடிநீர் வாரியத்திடம் முறையிட்டனர்.


இதைத்தொடர்ந்து சீரமைப்பு பணியில் குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர்கள் ஈடுபட்டிருந்த நிலையில், எதிர்பாராத விதமாக குடிநீர் செல்லும் ராட்சத குழாய்கள் மற்றும் குழாய் செல்லும் பாலமும் கீழே விழுந்து நொறுங்கியது. இவை அனைத்தும் குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் பணியில் இருந்தபோது நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. நல்ல வேளையாக தொழிலாளர்கள் யாரும் சம்பவ இடத்தில் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. 

குடிநீர் குழாய் உடைப்பு
உடனடியாக தொழிலாளர்கள் இது குறித்து குடிநீர் வடிகால் வாரிய உயர் அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் தற்போது தற்காலிக பாலம் அமைக்கும் பணி அங்கு நடைபெற்று வருகிறது.இந்த பணிகள் 2 வாரங்களுக்குள் முடிக்கப்பட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் அடுத்த இரு வாரங்களுக்கு 967 கிராமங்களுக்கு குடிநீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக குடிநீர் வாரிய உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. கிராமத்து மக்களின் நிலைமையை கவனத்தில் கொண்டு மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web