நடுவழியில் நிறுத்தப்பட்ட மின்சார ரயில்கள்!! பயணிகள் கடும் அவதி!!

 
ரயில்

சென்னையில் இருந்து புறநகர்களுக்கு ரயில்சேவை தினமும் இயக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் தினமும் அலுவலகம் செல்பவர்கள் மருத்துவ காரணங்கள் என பொதுமக்கள் பலரும் இந்த சேவை மூலம் தினமும் சென்னை வந்து செல்பவர்கள் உண்டு. சென்னை கடற்கரை-&தாம்பரம்-செங்கல்பட்டு வழித்தடத்தில் தினமும் 300 மின்சார ரயில்கள் வரை இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில்களில் அலுவலகம் செல்லக்கூடிய ஊழியர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், கூலி வேலை செய்யக்கூடியவர்கள் அதிகளவு பயன்படுத்தி வருகின்றனர்.

ரயில்

விரைவாக மற்றும் குறைந்த செலவில் பயணம் செய்ய பயணிகளின் முதல் தேர்வாக இருப்பது மின்சார ரயில்களே. பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு அதிகளவில ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தாலும் காலை மற்றும் மாலை நேரங்களில் கூட்ட நெரிசல் அதிகளவில்தான் காணப்படுகிறது.இந்நிலையில், சிக்னல் கோளாறு காரணமாக சென்னை கடற்கரை-& தாம்பரம் வழித்தடத்தில் இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்கள் சேவையில் இன்று 30 நிமிடம் தாமதம் ஏற்பட்டதால் பயணிகள் மிகவும் அவதிக்குள்ளானார்கள்.

சென்னை செல்ல ரயில் இல்லை! மற்ற ரயில்களை மறித்து பயணிகள் போராட்டம்!

புறநகர் மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக அலுவலகங்களுக்கு செல்லும் ஊழியர்கள், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் பொதுமக்களால் குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்ல முடியாமல் போனது. அதன் பின்னர் சிக்னல் கோளாறு சரி செய்யப்பட்டதால் புறநகர் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டன.மின்சார ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டதால் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web