வெடித்து சிதறிய எல்இடி டிவி !! சிறுவன் பரிதாப பலி!!

 
டிவி வெடித்து சிறுவன் பலி


உத்தரபிரதேசம் காஜியாபாத்தில் 16 வயது சிறுவன் தனது குடும்பத்தினருடன் அமர்ந்து டி.வி. பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் எல்.இ.டி. வெடித்து சிதறியது. அதில் சிறுவன் பரிதாபமாக பலியானான். டி.வி. வெடித்த வேகத்தில் சுவர் இடிந்து விழுந்த சம்பவத்தில் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். வெடி சத்தம் மற்றும் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

டிவி வெடித்து சிறுவன் பலி

உடனடியாக போலீசுக்கு  தகவல் தெரிவிக்கப்பட்டதில் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சிறுவன், அவரது தாய், மைத்துனர், நண்பர் ஆகிய 4 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான். இதைத்தொடர்ந்து உயிரிழந்த சிறுவனின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

டிவி வெடித்து சிறுவன் பலி
இது குறித்து உயிரிழந்த சிறுவன் வீட்டின் மற்றொரு அறையில் இருந்த மோனிகா  என்ற உறவினர்  கூறும்போது, ‘‘வெடி விபத்து நடந்தபோது தான் வேறொரு அறையில் இருந்தேன். வெடி சத்தத்தால் வீடு குலுங்கியது. சுவர் இடிந்து விழுந்தது’’ என்று கூறினார். எல்.இ.டி. டி.வி. வெடித்து சிதறிய விபத்தில் சிறுவன் பலியான சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web