பிரபல தமிழ் பட இயக்குநர் காலமானார்! திரையுலகினர் அஞ்சலி!

 
selvam

பிரபல தமிழ் பட இயக்குநரும், சின்னத்திரை இயக்குநருமான தாய் செல்வம் சற்று முன் சென்னையில் காலமானார். விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட்டாக ரசிகர்கள் கொண்டாடிய மௌனராகம் சீரியலை இயக்கிய தாய் செல்வம், நாம் இருவர் நமக்கு இருவர், காத்து கருப்பு, பாவம் கணேசன், கல்யாண முதல் காதல் வரை, ஈரமான ரோஜாவே 2 போன்ற பல சீரியல்களை இயக்கியுள்ளார். 

தாய் செல்வம்

மேலும், எஸ்.ஜே.சூர்யா நடித்த நியூட்டனின் மூன்றாம் விதி படத்தை இயக்கியுள்ளார்.  தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே சீசன் 2   சீரியலில் இயக்குனராக பணியாற்றி வந்த   தாய் செல்வம்   திடீரென இன்று உயிரிழந்தார். இவருடைய மரணம் சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.


அது மட்டுமல்லாமல் பிரபலங்கள் பலருக்கும் இந்த செய்தி ஏற்க முடியாத ஒரு சோகமாக தான் இருந்து வருகிறது என சின்னத்திரை பிரபலங்கள் வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர். இதனிடையே இவரது மறைவுக்கு திரை பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். உங்களது படைப்புகள் என்றென்றும் எங்கள் நினைவில் இருக்கும் என விஜய் தொலைக்காட்சி இரங்கல் தெரிவித்துள்ளது.

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மார்கழியில் ஏன் சுபகாரியங்களைச் செய்ய கூடாது?!