பிரபல தொழிலதிபர் வேணு சீனிவாசன் தாயார் காலமானார்! முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

 
வேணு சீனிவாசன் தாயார்

டிவிஎஸ் நிறுவனரும், பிரபல தொழிலதிபருமான வேணு சீனிவாசனின் தாயார் காலமானார். அவரது மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 1932-ம் ஆண்டு தமிழக வைணவ பாரம்பரிய குடும்பத்தில் பிறந்தவர் பிரேமா சீனிவாசன். அமெரிக்காவில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் 1960-களில் வரலாறு படித்தார். பிரபல தொழிலதிபரும், டிவிஎஸ் குழும நிறுவனருமான டி.எஸ்.சீனிவாசன் அவரது கணவராவார். வயது முதிர்வு காரணமாக பிரேமா சீனிவாசன் சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு டிவிஎஸ் குழுமத்தில் தலைமை பொறுப்புகளை வகிக்கும் வேணு சீனிவாசன், கோபால் சீனிவாசன் ஆகிய இரு மகன்கள் உள்ளனர்.

வேணு சீனிவாசன்

மறைந்த பிரேமா சீனிவாசன், இல்லற வாழ்வில் நுழைந்த பிறகும் இசை கற்றல், கலை, தோட்டங்கள் அமைத்தல், சைவ உணவு வகைகள் தயாரிப்பு போன்றவற்றில் அதிக ஆர்வம் காட்டி வந்தார். பாரம்பரிய கைவினை பொருட்கள் மட்டுமின்றி, துணி, ஆடைகள், நகைகள், வெள்ளிப் பொருட்கள் வடிவமைப்பாளராகவும் திகழ்ந்தார்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட அவர், மெட்ராஸ் சுற்றுச்சூழல் சங்கத்தை தொடங்கி சேலம் மற்றும் ஈரோடு பகுதிகளில் தொழிற்சாலைகளால் ஆறுகள் மாசுபடுவதற்கு எதிராக போராட்டங்கள் நடத்தியுள்ளார். அழிந்து வரும் உள்நாட்டு தாவரங்களையும், மரங்களையும் வளர்ப்பதில் அவர் அதிக ஆர்வம் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், “டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் தலைவர் வேணு சீனிவாசனின் தாயார் பிரேமா சீனிவாசன் இயற்கை எய்தினார் என்று அறிந்து மிகவும் வருத்தமுற்றேன். போற்றி வளர்த்த அன்னையை இழந்து தவிக்கும் வேணு சீனிவாசன் மற்றும் குடும்பத்தார்க்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

வேணு சீனிவாசன்

அதேபோல் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “டிவிஎஸ் நிறுவனர் திரு‌.சுந்தரம் ஐயங்கார் அவர்களின் மருமகளும்,திரு.வேணு சீனிவாசன் அவர்களின் தாயாருமான பிரேமா சீனிவாசன் அவர்கள் இயற்கை எய்திய செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன், அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன்.” என்று பதிவிட்டுள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!