அடி தூள்!! கருத்தரிப்பு மையங்களுக்கு கிடுக்கிப்பிடி உத்தரவு!! சுகாதாரத்துறை அதிரடி!!

 
கருத்தரிப்பு மையங்கள்

தற்போதைய கால கட்டத்தில் செயற்கை கருத்தரிப்பு மையங்கள் வீதிக்கு ஒன்றாக முளைக்க தொடங்கியுள்ளன. இயற்கையான முறையில் கருத்தரிப்பு என்பதே அரிதாகத் தொடங்கியுள்ளது. நம்முடைய வாழ்க்கை முறை, உணவு பழக்க வழக்கங்கள், மேற்கத்திய கலாச்சார வீரியம் இவற்றின் தாக்கம் தான் இந்த கொடூரங்கள் என சமூக ஆர்வலர்கள் வேதனைபட்டு வருகின்றனர்.

கருத்தரிப்பு மையங்கள்

அதே நேரத்தில் செயற்கை கருத்தரிப்பு மையங்கள் கருமுட்டை சேகரிப்பில் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டு வருவதாக தொடர் புகார்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இதனை கட்டுப்படுத்தும் வகையிலும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் தமிழக அரசு கிடுக்கிப்பிடி உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி தமிழகம் முழுதும்  செயல்படும் கருத்தரிப்பு மையங்கள் பதிவு செய்யப்பட வேண்டியது அவசியம். அதே போல் கருமுட்டை சேமிப்புக்கு ரூ50,000 ம், கருமுட்டையை செலுத்த ரூ50,000ம், வாடகை தாய் பதிவு கட்டணமாக ரூ2 லட்சமும்  பதிவு கட்டணமாக செலுத்த வேண்டும் என சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. 

தமிழக அரசு
இந்த உத்தரவின் மூலம் தமிழகத்தில் செயல்படும் போலியான கருத்தரிப்பு மையங்களை எளிதில் பொதுமக்கள் இனம் கண்டறியலாம் என தமிழக  அரசு விளக்கம் அளித்துள்ளது.  அதன்படி, புதிய பதிவு கட்டணங்களை செயற்கை கருத்தரிப்பு மையங்களுக்கு தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தப்பட்டுள்ளன. இந்த நடைமுறை   மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி, தமிழகத்தில் செயல்படும் அனைத்து செயற்கை கருத்தரிப்பு மையங்களும் அரசுக்கு பதிவு கட்டணம் செலுத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web