அடி தூள்!! இஸ்ரோவுடன் கைகோர்த்த இந்தியன் ரயில்வே!! என்னென்ன பயன்கள்? !

 
இஸ்ரோ இந்தியன் ரயில்வே

இந்தியன் ரயில்வே தனது சேவைகளை தொழில்நுப்ட அளவில் விரிவாக்கம் செய்யும் வகையில் இஸ்ரோவுடன் கைகோர்த்துள்ளது. இதனால் பயணிகளுக்கு ஏற்படப்போகும் கூடுதல் வசதிகள் குறித்து இந்தியன் ரயில்வே செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இஸ்ரோவுடன் இணைந்து உருவாக்கப்பட்ட நிகழ்நேர ரயில் தகவல் அமைப்பு (RTIS) என்ற தொழில்நுட்பத்தை இந்தியன் ரயில்வே நிறுவி உள்ளது. இதன் அடிப்படையில் இனி ரயில்களின் புறப்பாடு,சேரும் நேரம் ஆகியவற்றை துல்லியமாக பயணிகள் தெரிந்து கொள்ளலாம்.

ரயில்

இதற்காக இஸ்ரோவுடன் இணைந்து உருவாக்கப்பட்ட ரியல் டைம் ரயில் தகவல் அமைப்பு ரயில்களின் முழு தகவல்கள், புறப்படும் நேரம், ரயில்களின் தற்போதைய நிலைப்பாடு , வந்து சேரும் நேரம், கால தாமதம் இவைகளை பெறுவதற்காக அமைக்கப்பட்ட தொழில்நுட்பம். இதன் மூலம் ரயில் நிலையங்களில் ரயில்கள் வந்து சேரும் நேரம் மற்றும் புறப்படும் நேரங்களையும் ரன்-த்ரூ மூலம் துல்லியமாக அறிந்து கொள்ளலாம்.   பயணிகளின் சேவைகளுக்கு 30 வினாடிகளில் தகவல் கண்ட்ரோல் ஆபிஸ் அப்ளிகேஷன் மூலம் ரயில்களின் முழு கட்டுப்பாடுகளையும் அறிந்து கொள்ள முடியும்.

ர்யில்

இதன் மூலம்பயணிகள் கேட்கும் எந்த தகவலையும் இந்த அப்ளிகேஷன் 30 வினாடிகளுக்குள் தந்துவிடும் கண்காணிப்பு RTIS தொழில்நுட்ப கொண்ட ரயில்களின் தற்போதைய இருப்பிடம் மற்றும் வேகத்தை ரயில்வே அதிகாரிகளும் கண்காணித்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. ஏதேனும் பிரச்சனை என்றால் அதற்கான தீர்வுகளையும் ரயில்வே அதிகாரிகள், தொழில்நுட்ப அப்டேட் மூலம் அறிந்து கொள்ளலாம். இந்த லேட்டஸ்ட் அப்டேட்டில் இதுவரை இந்தியா முழுவதும்  21 மின்சார லோகோ ஷெட்களில் 2700 ரயில் இன்ஜின்களில்  RTIS சாதனங்கள் நிறுவப்பட்டுள்ளன. இனி இந்த ரயில்கள் அனைத்துமே  இஸ்ரோவின் சாட்காம் மையத்தை பயன்படுத்தும் வசதிகளை பெற்று விட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web