உயிரைப் பறித்த விளை​​​​​​​யாட்டு! ம​​​​​​​னைவியை பயமுறுத்த தூக்கில் தொங்கிய கணவர்!

 
கணவன் மனைவி

மனைவியை மிரட்டி தூக்கு மாட்டிக் கொள்வதைப் போல பயமுறுத்துவதற்காக முயற்சி செய்த கணவன், விளையாட்டு  விபரீதமாகி நிஜமாகவே தூக்கில் தூக்கில் தொங்கிய நிலையில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் மகாராஷ்டிர மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டம் விரார் மேற்கு வீர்சாவர்க்கர் மார்க் லஷ்மி நிவாஸ் என்ற கட்டித்தில் ராம்ஜி சர்மா (36) என்பவர் தனது மனைவி சாந்தினிதேவியுடன் (26) வசித்து வந்தார். இதில் ராம்ஜி சர்மா பயந்தரில் இயங்கி வரும் ஒரு துணி ஆலையில் வேலை பார்த்து வந்தார். 

இந்நிலையில் ராம்ஜி, தனது மனைவி சாந்தினிதேவிக்கு துணி வாங்க ரூ.2 ஆயிரம் கொடுத்துள்ளார். பின்னர் திடீரென்று தனக்கு ரூ.500 தேவைப்படுவதாக சாந்தினிதேவியிடம் திருப்பி தருமாறு கேட்டார். சாந்தினி பணம் தரமாட்டேன் என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.

ஒருவர் பலி

இதனால் கணவன், மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதை தொடர்ந்து ராம்ஜி, நீ ரூ.500 தரவில்லை என்றால் தான் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டியுள்ளார். ஆனால் சாந்தினிதேவி இதனை கண்டு கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

விறுவிறுவென ராம்ஜி தனது படுக்கை அறைக்கு சென்று சேலையால் தூக்கு போடுவது போல நாடகமாடியதாக தெரிகிறது.  திடீரென்று கால் விலகியதால் சேலை கழுத்தை இறுக்கியுள்ளது. இதில் மூச்சுத்திணறி ராம்ஜி மயங்கினார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது மனைவி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து கணவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

பலி
மருத்துவர்கள் ராம்ஜியை சோதனை செய்துவிட்டு அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என்று கூறினார்கள். இதைத்தொடர்ந்து தகவல் தெரிந்த போலீசார் விரைந்து சென்று வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து ராம்ஜியிடம் மனைவியிடம் போலீசார்  தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ரூ.500 திருப்பிக் கேட்டு மனைவியை மிரட்ட நினைத்த கணவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

From around the web