தங்கத்தின் விலை சரிவு!! மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்!!

 
தங்கம்

சர்வதேச தங்கத்தின் விலை நிலவரத்தை பொறுத்து சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாகவே தங்கத்தின் விலை ஏறுமுகமாக இருந்து வருகிறது. இந்தியாவில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை தொடர்ந்து தங்கத்தின் விலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. பண்டிகை காலங்களில் இவை மேலும் அதிகரிக்கும். செப்டம்பர் மாதம் முழுவதும் தங்கத்தின் விலை சரிந்து காணப்பட்டது. இதனால் நகை முதலீட்டாளர்கள், பிரியர்கள், இல்லத்தரசிகள் நகைக்கடைகளை நோக்கி படையெடுக்கத் தொடங்கினர். 

தங்கம்

அக்டோபர் மாத தொடக்கம் முதலே தங்கத்தின் விலை மீண்டும் ஏறத் தொடங்கியுள்ளது. இதனால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆபரணத் தங்கத்தின் விலை அட்சயதிருதியை, தீபாவளி பண்டிகை மற்றும் முகூர்த்தம் நிறைந்த நாட்களில் வழக்கத்தை விட விலை அதிகரிக்கும். அந்த நாட்களில் மக்கள் அதிக அளவில் நகைகளை வாங்குவதன் காரணமாக அதிக கொள்முதல் இருக்கும். இதனால் வணிக சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உயர்த்தப்பட உள்ளது. 

தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி விட்டது. இதனால் மக்கள் தங்க நகைகளில் முதலீடு செய்ய அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கமாக இருந்த தங்கம் விலையில் நேற்று உயர்ந்து விறபனையானது. இந்நிலையில் இன்று சற்று குறைந்து உள்ளது.அதன்படி, சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40-க்கு உயர்ந்து விற்பனை ஆன நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 40 ரூபாய் குறைந்து, ரூ.4,835-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து, ரூ.38,680-க்கு விற்பனையாகிறது.

தங்கம்

அதேபோல், நேற்று 18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.3,965-க்கு விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (18 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 4 ரூபாய் குறைந்து, ரூ.3,961-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று காலை நிலவரப்படி வெள்ளியின் விலையில் எந்த மாற்றமில்லாமல், ரூ.66,500-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.66.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web