தங்கம் அதிரடி விலைக்குறைப்பு!! உற்சாகத்தில் நகைப்பிரியர்கள்!!

 
தங்கம்

தமிழகத்தில் தங்கத்தின் விலை சர்வதேச சந்தையின் விலை நிலவரத்தை பொறுத்து நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு தங்கத்தின் மீதான இறக்குமதி வரி விதித்த பிறகு தங்கத்தின் விலை ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. ஒரு நாள் குறைந்தாலும் அடுத்த நாளே இருமடங்காக விலையேற்றம் பெறுகிறது. ஆனால் செப்டம்பர் 2 வது வாரம் முதலே தங்கத்தின் விலை இறங்குமுகமாகவே இருந்து வருகிறது . நேற்று விலையேற்றம் பெற்ற நிலையில் இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ளது. இதனால் நகைப்பிரியர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். 

தங்கம்

கடந்த சில நாட்களாக, உலகளாவிய காரணிகள், சர்வதேச சந்தையின் நிலை, மக்களின் வாங்கும் திறன் ஆகியவற்றுக்கு ஏற்ப தங்கத்தின் விலையில் மாற்றத்தைக் கண்டு வருகிறோம். எனினும், வரும் காலங்களில் தங்கத்தின் விலையில், ஏறுமுகமே நிலைக்கும் என்கிறார்கள் சந்தை வல்லுனர்கள். உலகளாவிய ஸ்திரமற்ற தன்மை, சந்தையில் உள்ள ஏற்ற இறக்கங்கள் காரணமாக தங்கம் விலை தொடர்ந்து சில நேரம் ஏற்றத்தையும் சில நேரம் வீழ்ச்சியையும் கண்டு வருகின்றது.

அதன்படி, சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120-க்கு உயர்ந்து விற்பனை ஆன நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 20 ரூபாய் குறைந்து, ரூ.4,650-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து, ரூ.37,200-க்கு விற்பனையாகிறது.

தங்கம்

அதேபோல், நேற்று 18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.3,825-க்கு விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (18 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 16 ரூபாய் குறைந்து, ரூ.3,809-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று காலை நிலவரப்படி வெள்ளியின் விலை கிலோவுக்கு 1,000 ரூபாய் குறைந்து, ரூ.61,500-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.61.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web