பெரும் சோகம்!! துர்கா பூஜையில் தீ விபத்து!! 5 பேர் பலி!! 47 பேர் கவலைக்கிடம்!!

 
தீவிபத்து

நாடு முழுவதும் தசரா திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது . குறிப்பாக வட இந்தியாவில் தசரா திருவிழா 10 நாட்களும் களைகட்டும் அந்த வகையில் உத்தரபிரதேச மாநிலம் பதோஹியில் துர்கா பூஜையில் சிறப்பு யாகங்கள், பூஜைகள், வழிபாடுகள் நடத்தப்பட்டு வந்தன. இங்கு நேற்று  இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 52 பேர் படுகாயமடைந்தனர். நேற்று இரவு 9.30 மணிக்கு சிறப்பு பூஜைக்கு பிறகு நடைபெற்ற ஆரத்தியில்   இந்த தீ விபத்து நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தீவிபத்து
இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது . தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் உடனே அங்கு சென்று தீயை அணைத்தனர். மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதில் படுகாயமடைந்த 33 பேர் அருகிலுள்ள வாரணாசியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சிலர் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தீவிபத்து
இந்நிலையில், உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 2 சிறுவர்கள் , ஒரு பெண் உட்பட மொத்தம் 5 பேர் இது வரை உயிரிழந்துள்ளனர். மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. இதனை மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். துர்கா பூஜையில் சாமி தரிசனம் செய்ய சென்ற இடத்தில் தீ விபத்து ஏற்பட்டு மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web