கோர விபத்து!! தலைகீழாகக் கவிழ்ந்த சுற்றுலாப் பேருந்து!! 5 மாணவர்கள் உட்பட 9 பேர் பலி!!

 
விபத்து

இந்தியா முழுவதும் தசரா பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வந்தது. பல மாநிலங்களில் தசரா திருவிழாவை ஒட்டி 10 நாட்கள் பள்ளிகளுக்கு  விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளிகள் மாணவர்களை சுற்றுலாக்கள் அழைத்து சென்று மகிழ்வித்து வருகின்றன. அந்த வகையில்  கேரளாவில்  எர்ணாகுளம் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.

விபத்து

இந்தப் பள்ளியில் மாணவர்களை  ஊட்டிக்கு சுற்றுலா அழைத்து செல்ல திட்டமிட்டிருந்தனர்.  இந்த சுற்றுலாவில் 43 மாணவர்கள், 5 ஆசிரியர்கள் உட்பட  51 பேர் கலந்து கொண்டனர். பேருந்து மூலம் சுற்றுலா செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த பேருந்து பாலக்காடு-வடகஞ்சேரி தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்று கொண்டிருந்த கேரள அரசுபேருந்து  மீது படுபயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் சுற்றுலா சென்ற பேருந்து நடுச்சாலையில் தலைகீழாக கவிழ்ந்தது.  5 மாணவர்கள் உட்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்து

41 பேர் படுகாயம் அடைந்து மோசமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவல் அறிந்ததும்  உடனடியாக சம்பவ இடத்திற்கு  விரைந்த தீயணைப்பு படையினர் மற்றும் மீட்புக்குழுவினர் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விபத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துமனைகளில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.  இதில் 4 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. இந்த உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.விடுமுறையில் ஜாலியாக சுற்றுலா சென்ற மாணவர்கள் உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web