தமிழகத்தில் அதிகரிக்கும் லஞ்ச பணம்! விருதுநகரில் பெண் வி.ஏ.ஓ., கைது!

 
உமாவதி

தமிழகத்தில் அரசு அதிகாரிகளிடையே லஞ்சம் வாங்கும் போக்கு அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் புலம்பி வருகின்றனர். பலர் நேர்மையானவர்களாக இருந்தாலும், ஒரு சில அரசு ஊழியர்களின் பேராசை பொதுமக்களை கதற செய்கிறது. நேற்று லால்குடி மகளிர் காவல் நிலையத்தில் லஞ்சம் வாங்கியதாக பெண் ஆய்வாளர் கைது செய்யப்பட்ட நிலையில், விருதுநகரில் பெண் கிராம நிர்வாக அலுவலர் ரூ.5,000 லஞ்சம் வாங்கியதாக அவரது உதவியாளருடன் சேர்த்து கைது செய்யப்பட்டுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே ரூ.5,000 லஞ்சமா, பட்டா மாற்றுவதற்காக பெற்ற பெண் கிராம நிர்வாக அலுவலரையும், கிராம உதவியாளரையும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர். சிவகாசியை அடுத்துள்ள கீழத்திருத்தங்கல் ஊராட்சி பள்ளப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பிருதிவிராஜ். இவர் தனது நிலத்திற்கான கூட்டு பட்டாவை பிரித்து, தனிப்பட்டாவாக வழங்கக் கோரி, செங்கமலப்பட்டியில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார்.

பணம்

இந்நிலையில், கிராம நிர்வாக அதிகாரியாக உள்ள உமாவதி(45) மற்றும் கிராம உதவியாளர் பொன்ராஜ் ஆகிய இருவரும், கூட்டுப் பட்டாவை தனி பட்டாவாக மாற்றம் செய்து தருவதற்காக ரூ.10 ,000 லஞ்சம்  கேட்டதாக கூறப்படுகிறது. அதன் பின்னர், ரூ.10 ஆயிரம் தர தன்னால் முடியாது என்று பிரிதிவிராஜ் கேட்டுக் கொண்டதின் பேரில் இறுதியாக ரூ.5 ஆயிரம் வாங்கிக் கொள்ள இருவரும் சம்மதித்துள்ளனர்.

மகிழ்ச்சி! அரசு அலுவலகங்களில் லஞ்சம் தர தேவையில்லை!

இதனிடையே லஞ்சம் தர விரும்பாத பிருதிவிராஜ், இது குறித்து விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்தார். தொடர்ந்து, அவர்களது ஆலோசனைப்படி ரசாயனம் தடவிய ரூ.5,000 பணத்தை பிருதிவிராஜ், நேற்று கிராம நிர்வாக அலுவலர் உமாவதியிடம் கொடுத்தார். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார், உமாவதி, அவரது உதவியாளர் பொன்ராஜ் ஆகியோரை கைது செய்தனர். தொடர்ந்து, இருவரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மார்கழியில் ஏன் சுபகாரியங்களைச் செய்ய கூடாது?!

From around the web