போட்றா வெடிய!! இனி வாட்ஸ் அப் குரூப் காலில் 38 பேர்!! 24 மணி நேரமும் ஃப்ரீயா பேசலாம்!!

 
வாட்ஸ் அப்

தகவல் பரிமாற்ற செயலிகளில் அதிகமான வாடிக்கையாளர்களை கொண்டிருப்பது வாட்ஸ் அப்  செயலி. உலகம் முழுவதும் சுமார்  2 பில்லியனுக்கும் அதிகமான மக்கள்  வாட்ஸ் அப் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் வாடிக்கையாளர்களை அதிகப்படுத்தும் வகையிலும் அதனை தொழில்நுப்டத்தின் அடிப்படையில் மேம்படுத்தும் வகையிலும்  வாட்ஸ் அப் அடுத்தடுத்து தன்னை அப்டேட் செய்து வருகிறது. அத்துடன் பயனர்களின் தனியுரிமை காப்பதில் முக்கியத்துவம் அளித்து வருகிறது.

வாட்ஸ் அப்

தகவல் பரிமாற்றத்தை  எளிதாக்கும் வகையில் அவ்வப்போது புதிய அப்டேட்டுகளை அறிமுகம் செய்வதால் தொடர்ந்து வாடிக்கையாளர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளது. தற்போதைய அப்டேட் படி முதலில் வாட்ஸ் அப் குழுவில் இதற்கு முன்  256 நபர்கள் மட்டுமே சேர்க்கப்படலாம். தற்போது 512 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.மேலும் இன்ஸ்டாகிராமை போல எமோஞ்சிகள் கொண்டு Reply செய்யும் வசதியும் வந்துள்ளது. அத்துடன் ஆன்லைனில் இருப்பதை மறைத்து வைத்து கொள்ளும் வகையில் Settingல் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி Setting மெனுவில் கொடுக்கப்படும் ஆன்லைன் இண்டிகேட்டர்  மெனுவை தேர்வு செய்து, ஆன்லைனில் இருப்பதை யாரெல்லாம் தெரிந்து கொள்ளலாம் என்பதை பயனர்களே முடிவு செய்து கொள்ளலாம்.

வாட்ஸ்-அப்
அதே போல் இனி வாட்ஸ் அப் குரூப் காலில் 38 பேர் வரை இணைத்து  பேசலாம். இதுவரை  வாட்ஸ் அப் குரூப் காலில் அதிகபட்சமாக 8 பேர் மட்டும்  இணைய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இந்த புதிய வசதியை அறிமுகப்படுத்தப்படும் என தலைமை நிர்வாக அதிகாரி  தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.  இந்தியாவை பொறுத்தவரை சுமார் 49 கோடி மக்கள் வாட்ஸ் அப் பயன்படுத்துபவர்களாக இருந்து வருகின்றனர்.  புதிய அப்டேட் வெளியானால் மேலும் பயனர்கள் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என வாட்ஸ் அப் நிறுவனம் எதிர்பார்க்கிறது. வாடிக்கையாளர்களும் இந்த புதிய அப்டேட்டிற்காக காத்து கிடக்கின்றனர். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web