நாளை வானில் அதிசயம்! பூமிக்கு விட 1,300 மடங்கு பெருசு! மிக அருகில் வருகிறது வியாழன் கிரகம்!

 
வியாழன் சூரிய கிரகம்

நாளை, நமது பூமிக்கு அருகில் மிகப் பெரிய கோளான வியாழன் வரவிருக்கும் அரிய நிகழ்வு வானில் நடைபெற உள்ளது. 

சூரிய குடும்பத்தில் 5வது கோளாகவும், கோள்களில் மிகப் பெரியதுமான வியாழன் கிரகம் நமது பூமியை விட சுமார் 1,300 மடங்கு பெரியதாகும். இத்தகைய அதிசயத்தக்க வியாழன் கோளை 75க்கும் மேற்பட்ட துணைக்கோள்கள் சுற்றி வருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

சூரிய புயல்

இந்த பிரமாண்டமான வியாழன் கோள் நாளை திங்கட்கிழமை பூமிக்கு அருகில் வரவிருக்கிறது என்று நாசா அறிவித்துள்ளது. நாளை மாலை சூரியன் மேற்திசையில் மறையும் போது வியாழன் கோள் கீழ் திசையில் தெரியும். அப்போது வழக்கத்தை விட பெரிதாகவும், பிரகாசமாகவும் தெரியும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

சூரிய புயல்

இது போன்ற நிகழ்வு ஏற்கனவே கடந்த 1963ம் ஆண்டு நடந்துள்ளது. எனவே 59 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அதே போன்றதொரு நிகழ்வு நடைபெற உள்ளதால் ஆராய்ச்சியாளர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள். 

இந்த அரிய நிகழ்வை தொலைநோக்கி மூலம் மட்டுமே காண முடியும். இந்த நிகழ்வின் போது வியாழனை சுற்றி வரும் 4 துணைக்கோள்களையும் பார்க்க முடியும் என்று நாசா விஞ்ஞானிகள் கூடுதல் தகவல்களையும் தெரிவித்துள்ளனர். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

From around the web