பும்ராவுக்கு பதில் முகமது சிராஜ் !! ரசிகர்கள் ஏமாற்றம்!!

 
முகம்மது சிராஜ்

இந்தியா தற்போது தென் ஆப்ரிக்காவுடன் 3  போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் டி20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. உலகக் கோப்பை தொடரில் இருந்து இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விலகியுள்ளார். இவருக்கு முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக 4 முதல் 6 மாதங்கள் வரை ஓய்வு தேவை என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் 2 ஆண்டுகளாக பும்ரா இந்திய அணியில் விளையாடாமல் இருந்து வந்தார். ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் கடைசி இரு போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடினார்.



அதே போல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரிலும் பும்ரா பங்கேற்பார் என ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்திருந்த நிலையில் திடீரென அன்றைய போட்டியில் காயம் காரணமாக கலந்து கொள்ள இயலவில்லை என அறிவிக்கப்பட்டிருந்தது. பும்ராவுக்கு முதுகில் ஏற்பட்ட காயம் முழுமையாக குணமடையவில்லை. இதனால் உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியானது. 
ஏற்கனவே ஆல்-ரவுண்டர் ஜடேஜா காயம் காரணமாக விலகிய நிலையில்,  வேகப்பந்து வீச்சாளர் பும்ராவும் விலகியிருப்பது ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணி பந்துவீச்சில் பெரும் பின்னடைவை உருவாக்கலாம். பும்ரா விலகியுள்ளதால் அவருக்கு பதில் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, சிராஜ், ஆவேஷ் கான் இருவரில் ஒருவர் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறலாம் என கூறப்பட்டது.

பிசிசிஐ
இந்நிலையில், டி20 அணியில் காயமடைந்த ஜஸ்பிரித் பும்ராவுக்கு பதிலாக முகமது சிராஜ் சேர்க்கப்பட்டுள்ளதாக  பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த மாற்றம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடருக்கு மட்டும் தான், இன்னும் டி20 உலகக் கோப்பைக்கு அறிவிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை கௌகாத்தியில் இரண்டாவது போட்டி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி வீரர்கள் பட்டியல்: ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஆர்.அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் படேல், தீபக் சாஹர், உமேஷ் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், ஷாபாஸ் அகமது, முகமது சிராஜ்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web