நாளை விடுமுறை கிடையாது! வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகம் அறிவிப்பு!

 
இன்று வண்டலூர் உயிரியல் பூங்கா செயல்படாது!

தொடர் விடுமுறையையடுத்து, ஆர்வமுடன் பொதுமக்கள் வந்து, ஏமாற்றமடைந்து திரும்புவார்கள் என்பதால், வார விடுமுறை தினமான செவ்வாய்க்கிழமையான நாளை, வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு விடுமுறை கிடையாது. வழக்கம் போல், நாளை வண்டலூர் உயிரியல் பூங்கா பொதுமக்களின் பார்வைக்காக திறக்கப்படும் என்று நிர்வாகம் அறிவித்துள்ளது. 

வண்டலூர்

விஜயதசமி, ஆயுத பூஜை பண்டிகை கொண்டாட்டங்களுக்கு பள்ளி, கல்லூரி, நிறுவனங்களுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. புகழ்பெற்ற சுற்றுலா தலமான வண்டலூர் உயிரியல் பூங்காவில் எப்போதும் மக்கள் கூட்டம் அலைமோதும். வனவிலங்குகளை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமாக பார்த்து செல்வது வழக்கம். இதன் காரணமாக வெளி மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாமல், வெளி மாநிலங்களில் இருந்தும் பொது மக்கள் வருவது வழக்கம்.

வண்டலூர் உயிரியல் பூங்கா செவ்வாய்க்கிழமைகளில் பராமரிப்பு பணிகளுக்கு மூடப்படுவது வழக்கம். அதன்படி நாளை (செவ்வாய்க்கிழமை) மூடிப்பட்டு இருக்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது.

வண்டலூர் உயிரியல் பூங்காவில் மேலும் 2 சிங்கங்கள் கவலைக்கிடம்!

பண்டிகை விடுமுறை முன்னிட்டு நாளை (செவ்வாய்க்கிழமை) வண்டலூர், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா சுற்றுலா பயணிகளுக்கும், பார்வையாளர்களுக்கு திறந்திருக்கும் என்று பூங்கா நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பை தொடர்ந்து நாளை வண்டலூர் உயிரியல் பூங்காவில் வழக்கத்திற்கு மாறாக மக்கள் கூட்டம் அலைமோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web