மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

 
நோபல் பரிசு

இன்று மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்வீடனைச் சேர்ந்த விஞ்ஞானி ஸ்வாண்டே பாபோவுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 1901ம் ஆண்டு முதன்முதலில் 5 பிரிவுகளின் கீழ் நோபல் பரிசு வழங்கப்பட்டது. இதையடுத்து 1969ம் ஆண்டு ரிக்ஸ் வங்கி நன்கொடையாக அளித்த பணத்தைக் கொண்டு நோபல் பட்டியலில் பொருளாதாரத்துக்கான பரிசு சேர்க்கப்பட்டது. ஆண்டுக்கு ஒருமுறை 6 பிரிவுகளின் கீழ் தகுதியானவர்களை தேர்ந்தெடுத்து நோபல் பரிசு வழங்கப்படுகிறது.


அந்த வகையில் 2022ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் இன்று முதல் அறிவிக்கப்படுகிறது. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயில் அறிவிக்கப்படும். இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு சீசன் இன்று மருத்துவ விருதுடன் தொடங்குகிறது. செவ்வாய்கிழமை இயற்பியல், புதன்கிழமை வேதியியல் மற்றும் வியாழன் இலக்கியம். 2022-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வெள்ளிக்கிழமையும், பொருளாதார விருது அக்டோபர் 10ம் தேதியும் அறிவிக்கப்படும்.

நோபல் பரிசு

முதல் நாளான இன்று மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. நோபல் கமிட்டியின் தலைவர் நோபல் பரிசு பெறுபவரின் பெயரை அறிவித்தார். 2022-ம் ஆண்டிற்கான மருத்துவ நோபல் பரிசானது ஸ்வீடன் நாட்டை சேர்ந்த விஞ்ஞானி ஸ்வான்டே பாபோவுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 'அழிந்துபோன ஹோமினின்களின் மரபணுக்கள் மற்றும் மனித பரிணாமம் பற்றிய அவரது கண்டுபிடிப்புகளுக்காக' இவருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் டேவிட் ஜுலியஸ் (David Julius) மற்றும் ஆர்டம் பட்டாபுடியான் (Ardem Patapoutian) ஆகிய இருவருக்கும் மருத்துவத்துக்கான நோபல் பரிசு வழங்கபட்டது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web