அச்சச்சோ!! சூரியனில் 2,00,000க்கு வெடிப்பு!! பூமிக்கு வரப்போகும் புதிய ஆபத்து ?! அதிர்ச்சி ரிப்போர்ட்!!

 
சூரியன்

 

பூமிக்கு வெளிச்சத்தை இயற்கையாக கொண்டு வந்து சேர்ப்பது சூரியன், நிலா, நட்சத்திரங்கள் என பல உள்ளன. இருந்த போதிலும் உலகம் முழுவதும் காலை பொழுதுகளை வெளிச்ச மயமாக்கி தாவரங்கள், மனிதர்கள், விலங்குகள் ஆரோக்கியத்துடன் வாழ வழி செய்கின்றன. சூரியனின் கருணை இருப்பதால் தான் இன்றளவும் ஜீவராசிகள் ஆரோக்கியத்துடன் நீண்ட நெடுங்காலம் வாழ முடிகிறது என்பது நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மை. 

ஆனால் அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி சூரியனின் 2 லட்சத்திற்கும் நீளமான வெடிப்பு ஏற்பட்டுள்ளதால், சூரிய காந்த இழைகள் பூமியை நோக்கி வந்து கொண்டு இருக்கின்றன என்ற செய்தி பரவி வருகிறது. இதன் காரணமாக தகவல் தொழில்நுட்பம், பல சமிக்ஞைகள் (சிக்னல்கள்) பாதிக்கப்படலாம் என்ற அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

சூரியன்
சூரியனின் தெற்கு அரைக்கோளத்தில் அமைந்துள்ள காந்தத்தின் இழையில் சுமார் 2 லட்சத்திற்கும் நீளமான வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக இணையத்தில் செய்தி வெளியாகி இருக்கிறது. நேற்று காலை (4ம் தேதி) இந்த வெடிப்பு ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக பூமிக்கு பல்வேறு வகைகளில் ஆபத்து ஏற்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.சூரிய பிளவில் இருந்து வெளிப்படும் காந்த இழைகளால் பூமியில் ரேடியோ தொடர்புகள், எலக்டிரிக் கிரிட், கடற்படை சிக்னல்கள், விண்வெளி வீரர்கள் உள்பட விண்கலம் ஆகியவற்றுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்று சொல்லப்படுகிறது. 

சூரியன்
இதுவரை சூரியனின் படங்களை பல்வேறு அலைகளில் இருந்து படம் பிடித்ததுடன், அதன் செயல்பாடு மற்றும் முக்கிய அம்சங்களை தெரிந்து கொள்ள உதவியது. சூரியன் தன்னுடைய சூரியச் சுழற்சி காரணமாக உச்சத்தை எட்டுகிறது. இதன் காரணமாக சூரிய மண்டலத்தில் இருந்து ஆபத்தான மற்றும் புதிய சூரிய புள்ளிகள் வெளியேறி வருகின்றன. அதன் மூலம் நேற்று காலை முதல் வெளியேறிக் கொண்டு இருக்கும் சூரிய காந்த இழைகள் பூமியை நோக்கி சிறிய துகள்களாக வந்து கொண்டு இருக்கின்றன என்று விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தரும் செய்திகளை தெரிவித்து வருகின்றனர். இயற்கைக்கு விஞ்சிய அழகும் இல்லை. அதற்கு விஞ்சிய ஆபத்தும் இல்லை என்பது உண்மைதான் போலும்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web