அச்சச்சோ!! ரெப்போ வட்டி விகிதம் மீண்டும் உயர்வு!! வீடு, வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் உயர வாய்ப்பு!!

 
ரிசர்வ் வங்கி

பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் பொருளாதார ஏற்ற இறக்கத்தினை சீராக்கும் வகையில் அவ்வப்போது ரிசர்வ் வங்கியிடமிருந்து கடன் உதவியை பெற்றுக்கொள்ளும். இதற்கேற்ப ரிசர்வ் வங்கி  வட்டி விகிதத்தை உயர்த்தும்.

வீடு லோன்

அந்த வகையில் தற்போது ரெப்போ வட்டி விகிதம் 5.4% ஆக உள்ளது. இதனை ரிசர்வ் வங்கி  5.9% ஆக  உயர்த்தியுள்ளது. ரெப்போ விகிதம் 50 அடிப்படை புள்ளிகளை உயர்த்தப்பட்டுள்ளது. .ரிசர்வ் வங்கி நடப்பு ஆண்டில் மட்டும் வட்டி விகிதத்தை 4வது முறையாக உயர்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. ரெப்போ வட்டி விகிதம் உயர்வால் வீடு, வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் மேலும் உயரக் கூடும்.

வீடு லோன்

தனிநபர் கடனுக்கான தவணைத் தொகையும் அதிகரிக்கும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.2021மே தொடங்கி தற்போதைய கால கட்டம் வரை ரெப்போ வட்டி விகிதம் 1.4 % உயர்த்தப்பட்டுள்ளது. இது குறித்து ரிசர்வ் வங்கி  கவர்னர் சக்திகாந்த தாஸ் விடுத்த செய்திக்குறிப்பில்  “கொரோனா மற்றும் உக்ரைன் போர் காரணமாக உலக பொருளாதாரம் மந்த நிலையில் உள்ளதால் வட்டி விகிதம் மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளார்.” 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web