அதிமுக ஆலோசகராக பண்ருட்டி ராமச்சந்திரன்! காய் நகர்த்தும் ஓபிஎஸ் !

 
பண்ருட்டி ஓபிஎஸ்

ஊர் ரெண்டு பட்டால்... மீதி வாக்கியங்களை நீங்களே முழுமைப்படுத்தி கொள்ளுங்கள். அதிமுக இப்போது அப்படியான ஒரு நிலைமையில் தான் இருக்கிறது. டிடிவி தனியே போகும் போதே, அவரை புது கட்சி ஆரம்பிக்க விடாமல் அரவணைத்து சென்றிருக்க வேண்டும். அதை சரியான தலைமை இல்லாததால் யாரும் செய்யவில்லை. அதன் பிறகு மெளன யுத்தம் என காமெடி சபதம் எல்லாம் செய்து தியானத்தில் இருந்த ஓபிஎஸ்ஸுக்கு பதவி கொடுத்து அழகு பார்த்தார் எடப்பாடி.

இதையெல்லாம் மக்கள் அத்தனை எளிதில் மறந்திடுவார்களா என்ன? இருவரும் இரட்டைக் குழல் துப்பாக்கி போல செயல்பட்ட நிலையில், இப்போது இரு குழல்களும் எதிரெதிரே நின்று குறி பார்த்துக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், அடுத்த அஸ்திரமாக அ.தி.மு.க.வின் அரசியல் ஆலோசகராக இனி பண்ருட்டி ராமச்சந்திரன் செயல்படுவார் என்று ஓ.பன்னீர்செல்வம் திடீர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓபிஎஸ், இபிஎஸ்
அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு இடையிலான பிரச்சினைக்கு இன்னும் தீர்வு காணப்படாத நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் திடீர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘‘அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் ஆலோசகராக மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பண்ருட்டி ராமச்சந்திரன் கழக அமைப்புச் செயலாளராக இன்று முதல் நியமிக்கப்படுகிறார். எனவே அனைத்து கழக உடன்பிறப்புகளும் அரசியல் ஆலோசகரான பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக் கொள்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

தோல்விக்கு யார் காரணம்!? ஈபிஎஸ், ஓபிஎஸ் வலுக்கும் சர்ச்சை!
அ.தி.மு.க.வில் உட்கட்சிபூசல், தலைமை பொறுப்பு உள்ளிட்டவற்றில் சர்ச்சை நீடித்து வரும் நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த திடீர் அறிவிப்பு பெரும அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூத்த அரசியல்வாதியான பண்ருட்டி ராமச்சந்திரன் இதற்கு முன்னர் தே.மு.தி.க.வில் இருந்து விலகியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

From around the web