பெற்றோர்களே உஷார்!! மாணவர்களுக்கு எச்சரிக்கை!!

 
மாணவர்கள்

தமிழகம்  முழுவதும் பள்ளிகளில் காலாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை தொடங்கிய காலகட்டம் முதல் தமிழகம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இந்த விடுமுறை அக்டோபர் 9 வரை தொடரும் என பள்ளிக் கல்வித்துறை ஏற்கனவே அறிவித்துள்ளது. 

புதுச்சேரி மாணவர்கள்

பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக் கல்வித்துறையின்  கட்டிபாட்டில் உள்ள பள்ளிகளில் காலாண்டு மற்றும் முதல் பருவ தேர்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  6 முதல் 12-ம் வகுப்பு வரை அக்.10-ம் தேதியும் 1 முதல் 5-ம் வகுப்பு வரை அக்.13-ம் தேதியும் காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக  அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் தஞ்சை அருகே கொள்ளிடம் ஆற்றில் தூத்துக்குடியைச் சேர்ந்த 6 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பெற்றோர்களிடையே இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மாணவர்கள்

இந்நிலையில் காலாண்டு விடுமுறையில் வீட்டில் இருக்கும் மாணவர்கள், ஆறு, குளங்களில் இறங்கி குளிக்க வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. பெற்றோர் குழந்தைகளை தனியாக விட வேண்டாம். வீட்டில் இருக்கும் மாணவர்கள் செல்போனில் நேரத்தை செலவு செய்யாமல், புத்தக வாசிப்பு போன்றவற்றில் கவனம் செலுத்தி ஆக்கப்பூர்வமான செயல்படுங்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web