பரிதாபம்!! 5000 கோழிக்குஞ்சுகள் தீயில் கருகி பலி!!

 
தீவிபத்து

திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி அருகே அமைந்துள்ளது  சத்திரப்பட்டி. இங்கு வசித்து வருபவர் கர்ணன் . இவருடைய தொழில் விவசாயம். அத்துடன் தமது விவசாய நிலத்தில் கோழிப்பண்ணை ஒன்றை நடத்தி வருகிறார். இங்கு ஏராளமான கோழிக்குஞ்சுகள் பராமரிக்கப்பட்டு வளர்க்கப்பட்டு விற்பனை செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். 

தீவிபத்து

இந்நிலையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் கர்ணனின் கோழிப்பண்ணையில் திடீரென்று தீப்பற்றி எரிந்தது. தீ மளமளவென அனைத்து இடங்களுக்கும் பரவியது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கர்ணன் உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தார்.விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தார்கள். இருந்த போதிலும் பண்ணையில் இருந்த 5,000 கோழிக்குஞ்சுகள் தீயில் கருகி பரிதாபமாக பலியானது. 

தீவிபத்து

இதைத்தொடர்ந்து கோழிப்பண்ணை உரிமையாளர் கர்ணன் சத்திரப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்று விசாரணை நடத்தி வருகின்றனர். மின் கசிவா? அல்லது தொழில் போட்டி ஏதேனும் இருக்குமா? என்று பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web