பயணத்தை திட்டமிட்டுக்கோங்க!! நாளை முதல் 4150 சிறப்பு பேருந்துகள்!!

 
அரசு பேருந்து

தமிழகத்தில் பள்ளிகளில் காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி , அக்டோபர்  4 ஆயுத பூஜை மற்றும் அக்டோபர் 5 விஜயதசமி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அக்டோபர் 1ம் தேதி சனிக்கிழமையும் அரசு விடுமுறை .இதனால் அலுவலகம் செல்பவர்களுக்கும் தொடர்ந்து  4 நாட்கள் தொடர் விடுமுறை. இதனால் சொந்த ஊர் செல்ல ஆயத்தமாகி வருகின்றனர். வேலைக்காக சென்னையில்  வசித்து வருபவர்கள் குழந்தைகள் பள்ளி மற்றும் அலுவலக விடுமுறை தொடர்ந்து வருவதால் சுற்றுலா செல்ல திட்டமிட்டு வருகின்றனர்.

சிறப்பு பேருந்து

இதில் இடையில் அக்டோபர் 3ம் தேதி இடையில் ஒரு நாள் மட்டும் வேலை நாளாக உள்ளது. அன்று ஒரு நாள் விடுப்பு அனுமதிக்கப்பட்டால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பொதுத்துறை நிறுவன பணியாளர்களுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை. அக்டோபர் 1 முதல் 10  வரை அரசு பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை.  அனைத்து கல்லூரிகளும் விடுமுறை. இதன் அடிப்படையில் வெளியூர் பயணம் அதிகரிக்கும் என்பதால் அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் சிறப்பு பேருந்துகள் விடப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஏற்கனவே அறிவித்துள்ளார். 


இதன்படி செப்டம்பர் 30 மற்றும் 1ம் தேதி ஆகிய 2 நாட்கள் சென்னையில் இருந்து 2050 சிறப்பு பேருந்துகள் இயக்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவை ஏற்கனவே தினசரி இயக்கப்பட்டு வரும் 2100 பேருந்துகளை சேர்க்காமல் உள்ள எண்ணிக்கை மட்டுமே. தேவைகளின் அடிப்படையில் மேலும் கூடுதல் சிறப்பு பேருந்துகளை இயக்கவும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 


கோயம்பேடு, தாம்பரம் மெப்ஸ், பூந்தமல்லி பைபாசில் உள்ள பணிமனை ஆகிய 3 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பொதுமக்கள் நெரிசல் இல்லாமல் பயணிக்க முன்பதிவும் செய்து கொள்ளவும் ஏற்பாடுகள்  செய்யப்பட்டுள்ளன. இந்த உத்தரவின்படி செப்டம்பர் 30ம் தேதி நாளை வெள்ளிக்கிழமை மாலையில் இருந்து வெளியூர் செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.  "திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்செந்தூர், திருவனந்தபுரம், தென்காசி, கன்னியாகுமரி, மதுரை போன்ற தென் மாவட்ட பகுதிகளுக்கு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் புறப்படத் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

அரசு பேருந்துகள்

இதுகுறித்து போக்குவரத்து கழகம் விடுத்த செய்திக்குறிப்பில்  வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் 2050 சிறப்பு பேருந்துகள் சேர்ந்து மொத்தம் 4150 பேருந்துகள்  இயக்கப்பட உள்ளன. பொதுமக்களின் தேவையை கருதி கூடுதல் பேருந்துகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கூட்ட நெரிசல் இல்லாமல் பயணிக்க பகுதி வாரியாக பிரிக்கப்பட்டுள்ளன. மழை பெய்தால் ஒரு வேளை கூட்டம் குறையக்கூடும். அதற்கேற்ப பயணங்கள் திட்டமிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web