பொதுமக்களே உஷார்!! எல்ஐசியில் இருந்து பேசுவதாக கூறி வங்கிக் கணக்கில் நூதனத் திருட்டு!!

 
நூதன திருட்டு

தேனி மாவட்டம் போடி அருகே மேட்டு தெருவில் வசித்து வருபவர் ரஞ்சிதம். இவருக்கு வயது 78. இவரது கணவர் கந்தசாமி உயிரிழந்து விட்டார் இதன் பிறகு அவர் தன்னுடைய மகள் ஸ்ரீதேவி வீட்டில் வசித்து வருகிறார்.இந்நிலையில் ரஞ்சிதத்திற்கு கடந்த ஆண்டு ஜூலை 6ம் தேதி, ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், உங்களது கணவர் கந்தசாமி எல்.ஐ.சியில் பணம் செலுத்தி இருந்தார். அதன் முதிர்வுத் தொகை ரூ.37000 உங்களுக்கு வரவேண்டியுள்ளது. எனவே உங்கள் வங்கிக்கணக்கு தகவல்களை தந்தால் செலுத்திவிடுகிறோம் என்று பேசியுள்ளார்.

எல்.ஐ.சி.

இதை நம்பிய ரஞ்சிதம் வங்கியின் வங்கிக் கணக்கு தகவல்களை கொடுத்துள்ளார். பின்னர் ஓ.டி.பி.யையும் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் 5 முறை என மொத்தம் ரூ.49 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் நூதன முறையில் கொள்ளையடித்தார்கள்.

பணம் பறிபோனது குறித்து ரஞ்சிதத்திற்கு சில நாட்கள் கழித்தே தெரிந்ததால் உடனடவியாக போடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து தேனி சைபர் கிரைம் போலீசார் இந்த வழக்கு விசாரணையை கையில் எடுத்தது.

போலீஸ்

அதைத்தொடர்ந்து தனிப்படை அமைத்து மூதாட்டியின் வங்கிக்கணக்கில் இருந்து பணத்தை சுருட்டிய மர்ம ஆசாமிகளுக்கு வலை வீசப்பட்டது. அதில் வடமேற்கு டெல்லியில் வசித்து வந்த சதாசிவம் என்பவர் கைது செய்யப்பட்டார். மேலும் அவரது கூட்டாளிகளான வில்சன் குமார் மற்றும் முருகன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவர்களிடம் இருந்து 3 செல்போன்கள், ஒரு வங்கிக் கணக்கு புத்தகம், மற்றும் ரூ.1,49,000 தொகையையும் பறிமுதல் செய்த போலீசார், 3 பேரையும் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்த சம்பவம் தேனி மாவட்டத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.  இதுபோன்ற மோசடி ஆசாமிகளிடம் இருந்து பொது மக்கள் விழிப்புடன் செயல்பட்டு தங்களது பணத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று போலீசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!