நெகிழ்ச்சி!! காவல் ஆய்வாளருக்கு டிஜிபி சைலேந்திர பாபு வருத்தம்!!

 
சைலேந்திர பாபு

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் சந்தானராஜ் என்பவர் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவர் சமீபத்தில் பேசிய ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.அதில், ‘‘தனது மகளின் நிச்சயதார்த்தத்திற்காக நாள் குறிக்க மாப்பிள்ளை வீட்டிற்கு செல்வதற்காக உறவினர்கள் அனைவரும் வந்திருந்ததாகவும் அதற்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.

இந்நிலையில் அந்த முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்க முடியாமல் நான் கோயம்புத்தூரில் பந்தோபஸ்து பணிக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இது குறித்து எழுத்தர் போன் செய்து என்னிடம் கூறிய போது நான் என் மகளின் நிச்சயதார்த்தம் குறித்து கூறியபோதும் கண்டிப்பாக செல்ல வேண்டும் என்று உயர் அதிகாரிகள் கூறியதால் என்னால் மறுக்க முடியவில்லை.

சைலேந்திர பாபு

இதனால் நான் பந்தோபஸ்துக்கு செல்ல வேண்டியதானது. இதனால் தனது மகளின் நிச்சயதார்த்த நிகழ்ச்சி தடைபட்டதாக கூறி வேதனை தெரிவித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் இது போன்ற சம்பவங்களால் தான் பல காவலர்கள் மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொள்கிறார்கள். ஒரு சின்ன அட்ஜஸ்மெண்ட்டும் இல்லாத இல்லை வேலையை பார்த்து என்ன புண்ணியம்’’ என்று வருத்தம் தெரிவித்தார்.

சந்தானராஜின் இந்த ஆடியோ வைரலானதைத் தொடர்ந்து சந்தானராஜூக்கு காவல்துறை டி.ஜி.பி. சைலேந்திர பாபு வருத்தம் தெரிவித்து கடிதம் ஒன்றை அனுப்பி இருக்கிறார். அந்த கடிதத்தில், நடைபெற இருந்த தங்களது மகளின் திருமண நிச்சயதார்த்தத்தில் கலந்து கொள்ள விடுப்பு வழங்கப்படாததால் அது தடைபட்டது ஆடியோ வாயிலாக அறிந்து கொண்டேன். மேலும். தங்கள் மகளின் நிச்சயதார்த்தம் தடை செய்யபட்டதை அறிந்து மன வேதனை அடைந்தேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

டிஜிபி சைலேந்திர பாபு

இனி வரும் காலங்களில் இதே போன்ற முக்கிய குடும்ப நிகழ்வுகளில் காவல் அதிகாரிகள் கலந்து கொள்ள விடுப்பு விண்ணப்பிக்கும் பட்சத்தில் விடுப்பு மறுக்கக்கூடாது. இது குறித்து மேலதிகாரிகளிடம் தான் வலியுறுத்தியுளளதாக கூறியுள்ளார். தடைபட்ட மகளின் நிச்சயதார்த்ததிற்கு மீண்டும் நடக்கும் போது தேவையான நாட்கள் விடுப்பு வழங்குமாறு மாவட்ட எஸ்.பிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் தனது கடிதத்தில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு எழுதியுள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web