அதிர்ச்சி! பிரபல இயக்குநரும், இசையமைப்பாளருமான எஸ்.வி.ரமணன் காலமானார்!

 
எஸ்.வி.ரமணன்

பிரபல இயக்குநரும், இசையமைப்பாளருமான எஸ்.வி. ரமணன் உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலை காலமானார். 1980, 90களில் பிரபலமான இயக்குநராகவும் இசையமைப்பாளராகவும் வலம் வந்தவர் எஸ்.வி. ரமணன். 1966ல் ஜெயகாந்தன் இயக்கத்தில் வெளிவந்த 'யாருக்காக அழுதான்' படத்தின் மூலம் இசையமைப்பாளராக  திரைப்படத் துறைக்கு அறிமுகமானார். இத்திரைப்படத்தில் நாகேஷ், கே. ஆர். விஜயா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

அதற்கு முன் இசைமைப்பாளர் சலீல் சவுத்திரிக்கு ‘செம்மீன்’ (மலையாளம்), ‘ஜல்தீப்’ (இந்தி) ஆகிய படங்களுக்கும், சி.என்.பாண்டுரங்கனின் ‘எதிர்பாராதது’, ‘கச்சதேவயானி’, ‘பாண்டித்தேவன்’ ஆகிய படங்களுக்கும் உதவியாளராக பணியாற்றியுள்ளார்.

எஸ்.வி.ரமணன்
1983-ம் ஆண்டு 'உருவங்கள் மாறலாம்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இவர் கடைசியாக இயக்கிய படம் துரைபாபு ஷோபனம் இன்னும் வெளியாகவில்லை. பழம்பெரும் இயக்குநர் கே.சுப்பிரமணியம் மகனான இவர், திரைப்படங்கள், வானொலி விளம்பரங்கள் தயாரிப்பதில் ஆர்வம் அதிகரித்ததால் ‘யாருக்காக அழுதான்’ படத்திற்குப் பிறகு திரைப்படங்களுக்கு இவர் பணியாற்றவில்லை.

பியானோவும், ஹார்மோனியமும் நன்றாக வாசிக்கத் தெரிந்த இவர் இசையை யாரிடமும் கற்கவில்லை. உருவங்கள் மாறலாம் படத்தில் இவரது இசையில் இசை அமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் ஒரு பாடலைப் பாடியுள்ளார். இவருக்குச் சொந்தமாக பாடல் பதிவு செயவதற்கான திரையரங்கு உள்ளது.

எஸ்.வி.ரமணன்

இந்த நிலையில் இசையமைப்பாளர் எஸ்.வி.ரமணன் வயது மூப்பு காரணமாக இன்று அதிகாலை ஆர்.ஏ.புரத்தில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவரது இறுதிச் சடங்குகள் இன்று மாலை நடைபெறும். ரமணனுக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். இவர் பிரபல இசையமைப்பாளர் அனிருத்தின் தாத்தா என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், தொலைக்காட்சி கலைஞர்கள் மற்றும் விளம்பர உலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

From around the web