தாஜ்மஹாலை சுற்றி கடைகள் நடத்த தடை!! உச்சநீதிமன்றம் அதிரடி!!

 
தாஜ்மஹால்

உலக அதிசயங்களில் ஒன்று தலைநகர் டெல்லி ஆக்ராவில் அமைந்துள்ள  தாஜ்மஹால். இதனை காண நாள்தோறும் உலகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கில் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம். இதனைச் சுற்றி பல்வேறு கடைகளும், பாதசாரிகளும் கடைவிரித்துள்ள்னார். இது குறித்து பொதுநலவழக்கு ஒன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

தாஜ்மஹால்

இந்த வழக்கின் விசாரணையில்  உச்சநீதிமன்றம் அதிரடி கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்  ‘‘ஆக்ரா மேம்பாட்டு ஆணையம் கூறும்போது, உடனடியாக அனைத்து விதமான வர்த்தகச் செயல்பாடுகளையும் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தது. மேலும் 17ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க வெள்ளை பளிங்கு கற்களால் கட்டப்பட்ட தாஜ் மஹாலின் எழிலை சிதையாமல் பாதுகாக்க வேண்டும். 

உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் எம்சி மேத்தா தனது மனுவில், ‘‘தாஜ் மஹாலைச் சுற்றி எகோ-சென்சிட்டிவ் பகுதி இருக்கிறது. இது யுனெஸ்கோவால் பாதுகாக்கப்பட்டு வரும் நினைவுச் சின்னம். இதன்படி தாஜ் மஹாலை சுற்றுச்சூழல் மாசிலிருந்து காக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி கடந்த 1996ம் ஆண்டு உச்ச நீதிமன்றம், 10,400 சதுர கிமீ பரப்பை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்தது.


சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் தாஜ்மஹால் அருகே இடத்தை ஆக்கிரமித்து ஏராளமானோர் கடைகளை நடத்தி வருகின்றனர். சட்டவிரோதமான வர்த்தக நடவடிக்கைகளும் நடந்து வரும் நிலையில், இது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிரானது’’ என தெரிவித்திருந்தார்.இந்த மனு நேற்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், ஏஎஸ். ஒகா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் கூறும்போது, ‘‘மனுதாரரின் பொது நலம் குறித்து வழங்கப்பட்ட இந்த மனுவை நாங்கள் கோரிக்கையை ஏற்கிறோம். இதன் காரணமாக இனி தாஜ் மஹாலைச் சுற்றி 500 மீட்டர் சுற்றளவுக்குள் எந்த விதமான வர்த்தகச் செயல்பாடும் நடைபெறக் கூடாது.

தாஜ்மஹால்

ஆக்ரா மேம்பாட்டு ஆணையம் இந்தத் தடையை நீர்த்துப்போக விடாமல் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.  தாஜ்மஹால் எல்லை சுவற்றில் இருந்து 500 மீட்டருக்குள் இருக்கும் கடைகள் அனைத்தும் உடனடியாக அகற்றப்பட வேண்டும். அதுமட்டுமல்லால் தாஜ் மகாலின் பொலிவை பாதிக்கும் வகையில், அதனை சுற்றி 500 மீட்டருக்குள் மரங்களை எரிப்பது, திடக்கழிவுகளை எரிப்பது, நகராட்சி திடக்கழிவு, வேளாண் கழிவு குவிப்பது ஆகியவைக்கும் தடைவிதிக்கப்படுகிறது’’ என்று உத்தரவு பிறப்பித்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web