நடனமாடியபடியே உயிரிழந்த மகன்! அதிர்ச்சியில் சரிந்து விழுந்து தந்தையும் மரணம்!

 
நடனம் உயிர்

நவராத்திரி கொண்டாட்டத்தில் கர்பா நடனமாடிய மகன் உயிரிழந்ததால் சோகம் தாங்க முடியாத தந்தையும் உயிரை விட்ட சோக சம்பவம் மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டத்தில் விரார் என்ற நகரில் நவராத்திரி கொண்டாட்டங்கள் களைகட்டியிருந்தன. அதன் ஒரு பகுதியாக அங்கு கர்பா என்னும் பாரம்பரிய நடன் ஆடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

குடிபோதையால் நிகழ்ந்த மரணம் !

குளோபல் வளாகத்தில் நடைபெற்ற இந்த நடன நிகழ்ச்சியில் மணீஷ் நராப்ஜி சோனிக்ரா என்ற 35 வயது நபர் ஆர்வமுடன் கலந்து கொண்டு நடனம் ஆடியுள்ளார். 

அந்த இடத்தில் மணீஷின் தந்தையான நராப்ஜி சோனிக்ரா (66) என்பவரும் கலந்து கொண்டார். இளைஞர் மணீஷ் நடனமாடிக் கொண்டிருந்த போது திடீரென்று அப்படியே மயங்கி கீழே சரிந்தார். இதனால் அதிர்ந்து போன தந்தை அங்கிருந்த அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மணீஷை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக தூக்கிச் சென்றார். 

நடனம்

தனியார் மருத்துவமனையில் மணீஷை பரிசோதித்த மருத்துவர்கள் மணீஷ் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக கூறினர்.

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த நராப்ஜி திடீரென்று நின்று கொண்டிருந்த இடத்திலேயே சரிந்து விழுந்து உயிரை விட்டார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மகன் இல்லாத உலகத்தில் தனக்கென்ன வேலை என்று நினைத்த தந்தை, அதிர்ச்சியில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோக அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web